தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் சில இடங்களில், வெப்பச் சலனம் காரணமாக, இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்து உள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில், தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலின் வட மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வட மேற்கில் நகர்ந்தால், கூடுதல் மழை பெய்யலாம் என, கணக்கிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் இருந்து, தமிழக பகுதிகள் வழியாக, வடக்கு நோக்கி மேக கூட்டங்கள் நகருகின்றன. இதனால், தமிழகத்தில், இன்று திடீர் மின்னல், மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில், வெப்பச் சலனம் காரணமாக, மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னை மயிலாப்பூர், எண்ணுாரில், 4 செ.மீ., மழை பெய்து உள்ளது. புழல், செங்குன்றம், சோழவரம், காட்டுக்குப்பம், 3; செங்கல்பட்டு, வட சென்னை, காஞ்சிபுரம் மற்றும், திருவள்ளூரில், 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
நன்றி : தினமலர்

Comments
Post a Comment