நிலவில் தண்ணீர் - சந்திரயான் கண்டுபிடிப்பு
நிலவில் தண்ணீர் இருப்பது சந்திரயான்-1 விண்கலம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அந்த விண்கலம் கண்டறிந்தது. ஆனால் அதில் 100 சதவீத துல்லியமாக தகவல் கிடைக்கவில்லை.இந்த நிலையில் சந்திரயான்-1 விண்கலத்தின் தொழில்நுட்பத்தை கொண்டு ஆய்வு செய்ததில் நிலவில் ஐஸ் கட்டிகள் உறைந்து கிடப்பது தெரியவந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து பி.என்.ஏ.எஸ். என்ற பத்திரிகையில் நாசா கூறியதாக வெளியாகியுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-
நிலவின் துருவ மண்டலத்தில் மிகவும் இருள் சூழ்ந்த பகுதி மற்றும் மிகவும் குளிர் பிரதேசத்தில் தண்ணீர் ஐஸ் கட்டிகள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சந்திரயான்-1 விண்கலத்தின் தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு காற்று மண்டலம், மனிதன் உயிர் வாழ தேவையான சூழல் உள்ளதா? என்பதை அறிய இந்த ஐஸ் கட்டிகள் கண்டுபிடிப்பு ஆதாரமாக திகழும்.
நிலவின் தென் பகுதி பள்ளத்தில் தான் அதிகளவில் ஐஸ் கட்டிகள் உள்ளன. அதே நேரத்தில் வடபகுதியில் உள்ள ஐஸ் கட்டிகள் பரந்த அளவில் இருக்கின்றன. ஆனால் அது அடர்த்தி குறைவாக உள்ளது. இதன் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியாகியுள்ளது. சூரிய வெளிச்சம் செல்ல முடியாத பகுதியில் அந்த பள்ளம் இருக்கிறது. அங்கு மைனஸ் 156 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினத்தந்தி
https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/23001111/Water-on-the-ground-is-solid--NASA-scientists-announcement.vpf

Comments
Post a Comment