முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு
கண்ணீர் அஞ்சலி
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்!
உடல்நலக் குறைவால் வாஜ்பாய் காலமானர்; அவருக்கு வயது 93
*வாஜ்பாயின் வாழ்க்கை...*
*குவாலியரில் 1924-ம் ஆண்டு டிச. 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்தார்.*
*இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் வாஜ்பாய்.*
*காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற முறையில் வாஜ்பாய் மட்டுமே 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தவர்.*
*பாரத ரத்னா உள்ளிட்ட இந்தியாவின் மிக உயரிய விருதுகளை பெற்றவர் வாஜ்பாய்.*
*நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியவர் வாஜ்பாய்.*
*10 முறை மக்களவைக்கும், 2 முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டவர் வாஜ்பாய்.*
வாழ்க்கை வரலாறு :
பொக்ரான் நாயகர்,தங்க நாற்கர திட்டம் தந்த மக்கள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய்
திரு. அடல் பிஹாரி வாஜ்பாய்
திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு மக்கள் தலைவர், பொது சேவையில் உறுதியோடு ஈடுபட்டவர். அக்டோபர் 13, 1999 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் அவர் புதிய அரசுக்கு தலைமையேற்றார். 1996-ஆம் ஆண்டு குறுகிய காலத்திற்கு அவர் பிரதமராக இருந்தார். பண்டிட் ஜவஹர்லால் நேரு காலத்திற்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு முறை தொடர்ந்து பதவி ஏற்ற முதல் பிரதமர் இவர்தான்.
ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாயின் அரசியல் காலம் 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. அவர் ஒன்பது முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே ஒரு பெரிய சாதனைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் வாஜ்பாயிக்கு பெரிய பங்கு உண்டு. அவர் இதற்கு ஒரு பிரதமராக, வெளியுறவுத்துறை அமைச்சராக, பல நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவராகவும் எதிர்க் கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் தனது மாணவ பருவத்திலேயே அரசியல் வாழ்க்கையைத் துவங்கிவிட்டார். ஆம், அவரது முதல் அரசியல் பயணம் வெள்ளையர்கள் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக 1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டம்தான். அரசியல், அறிவியல் மற்றும் சட்ட மாணவரான இவர், தனது கல்லூரி நாட்களிலேயே வெளியுறவுத் துறையில் அதிக நாட்டம் செலுத்தினார். இவரது இந்த விருப்பம் நாளுக்கு நாள் மெறுகேறிக்கொண்டே இருந்தது. அது பல்வேறு இருதரப்பு மற்றும் பலதரப்பு மாநாடுகளில் இந்தியப் பிரதிநிதியாக அவர் பேசும்போது வெளிப்பட்டது.
அவர் தனது வாழ்க்கையை ஒரு பத்தரிக்கையாளராகத் துவங்கினார். 1951-ல் இவர் பாரதிய ஜன சங்கத்தில் சேர இது பெரிதும் உதவியது. இந்த பாரதிய ஜனசங்கம் தான் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியை முன்னடத்தும் பாரதிய ஜனதா கட்சி. ஒரு நல்ல கவிஞர் என்று பாராட்டப்படும் இவர், இன்றளவும் தனது பொது வாழ்க்கையில் சிறிது நேரம் ஒதுக்கி இசையில் ஈடுபடுகிறார். அவ்வப்போது,அவர் சமையல்கலையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார்.
வாஜ்பாய், நல்ல உள்ளம் கொண்ட ஒரு பள்ளி ஆசிரியருக்கு டிசம்பர் 25, 1924 அன்று மகனாகப் பிறந்தார். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் இவரது சொந்த ஊர். திரு. வாஜ்பாயின் பொதுவாழ்க்கை அவரது அரசியல் நிபுணத்துவ இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு பரிசாக அமைந்தது. சில ஆண்டுகளில் இவர் ஒரு மதிப்பிற்குரிய தலைவராக உருவெடுத்தார். ஒரு சிறந்த மனப்பாண்மையோடு உலத்தை அவர் அணுகுவதும், மேலும், ஜனநாயகத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் வெகுவாகப் போற்றப்பட்டது.
அவர் பெண்கள் முன்னேற்றம், சமூக சமத்துவம் ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர். தொலைநோக்குப் பார்வை, இந்தியாவின் முன்னேற்றம் என்பதிலும், நம் நாடு மிகவும் வலுவானது, வளமானது என்பதிலும் பெரும் நம்பிக்கை உடையவர். கடந்த 5000 ஆண்டு இந்தியாவின் நாகரீக வளர்ச்சி வரலாற்றிலும், நவீனம், மறுமலர்ச்சி அனைத்திலும் இவரது பங்கு உண்டு. இவர் செய்துள்ள மாற்றங்கள் அடுத்த 1000 ஆண்டுகளில் எழும் சவால்களையும் சமாளிக்க உதவும்.
இந்தியா மீது அயராத அன்பு கொண்டு நாட்டிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையையும், 50 வருடங்களுக்கு மேலாக சமூகத்துக்கு ஆற்றிய சேவைகளையும் கௌரவிக்க இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது வாஜ்பாய்யிற்கு வழங்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு “சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்” என்ற பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டது. “அடல் என்ற அவரது பெயருக்கு ஏற்ப அவர் சிறந்த தலைவர்; ஆழமான அரசியல்வாதி;, தன்னலமற்ற சமூக சேவையாளர்; வலிமையான சொற்பொழிவாளர்; கவிஞர்; இலக்கியவாதி, பத்திரிக்கையாளர் மற்றும் பல்வேறு திறமைகளைக் கொண்டவர். மக்களின் எண்ணங்களைப் பிரதிபளிப்பவர். அவரது பணிகள் அவரது தேசப்பற்றை எடுத்துரைக்கும்

Comments
Post a Comment