ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது மேலும் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் லேசான மழை பெய்யும்.
மீனவர்கள் இரண்டு நாட்கள், வடக்கு, மத்திய வங்கக்கடல், அந்தமான் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 18.செ.மீ, சின்னக்கல்லாரில் 17 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
இவ்வாறு கூறினார்.

Comments
Post a Comment