வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல் Image courtesy : Indian youth.net தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் இரண்டு மாதங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும். மேலும், இந்தக் காலகட்டத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:- தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படும். மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படும். சிறப்பு முகாம்கள்: தமிழகத்தில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி மொத்...