POSITIVE ENERGY - PART 10- மன வலிமை
மனம் வலிமை பெறுவது எப்படி?
Image courtesy : isha-sadhguru
நாம் ஒரு காய்..கனி..மார்கெட்டுக்கு போனால் அழுகிய பழங்களையோ..சொத்தையான காய்களை வாங்குவதில்லை.. அது ஆரோக்கியத்தை இல்லாமல் செய்துவிடும்.. அதைப்போலத்தான்..எண்ணத்தின் வலிமை என்பது நாம் என்னும் எண்ணங்களை பொறுத்தே இருக்கின்றது.. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றால் எதை பற்றி நாம் கவலைப்பட போகின்றோம்..நம்முடைய மனதை நாம் ஒருபொழுதும் குழப்பத்தில் கொண்டு வர கூடாது..பிறர் மனதை குழப்பினாலும் அந்த சூழ்நிலையில் இருந்து நாம் விலகி விடவேண்டும்..யாராவது குப்பைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு, ஆகா என்ன அழகான குப்பை என்று ரசிப்பார்களா என்ன?வீண் எண்ணமும் தீய எண்ணமும் நாம் மனதிற்கு கொடுக்கும் அழுகிப்போன காய்..கனிகள்..இதை மனதில் கொண்டு வருவதால் மனம் தனது ஆரோக்யத்தையும்..வலிமையையும்.. இழந்து விடுகின்றது.எப்படிப்பட்ட சூழ்நிலை ஆனாலும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்..அது எப்படி முடியும் என்று சொல்கின்றீர்களா?சரி கவலைப்படுங்கள் ஆனால்,அந்த சூழ்நிலை மாறிவிடுமா..நீங்கள் கவலைப்படுவதால் இன்னும் அந்த சூழ்நிலை அதிகமாக கெட்டுவிடும்..ஏனென்றால் எண்ணத்தை படைப்பவர் நீங்கள்தான்.. எங்கேயோ எண்ணங்களை கடன் வாங்கி வெளியே இருந்து எண்ணத்தை உற்பத்தி செய்கின்றேன்என்று சொல்பவர்கள் யாராவது இருக்கமுடியுமா என்ன?எண்ணத்தை நீங்கள் உற்பத்தி செய்யும் பொழுது அதை ஏன் நல்ல எண்ணமாக உற்பத்தி செய்யகூடாது?ஒரு சின்ன விஷயம் சொல்கின்றேன்..நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கின்றீர்கள்.. அன்று உங்களுக்கு லீவு தேவைப்படுகின்றது.. ஆனால், நீங்கள் உங்கள் சக ஊழியரிடம் சொல்கின்றீர்கள் இப்ப மேனேஜர் கிட்ட லீவு கேட்டா தரமாட்டேன்னு சொல்லுவார் பாரேன்.. உங்கள் சக ஊழியரும் அதை ஆமோதித்து இந்த மேனேஜர் இப்படித்தான் கண்டிப்பா லீவு தரமாட்டார் என்று சொல்கின்றார்..இங்கேதான் தவறு ஆரம்பிக்கின்றது..உங்கள் மனம் என்பது ஒரு கொரியர் சேவை மாதிரி நீங்கள் ஒரு எண்ணத்தை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் யாரை குறித்து இருக்கின்றதோ அவர்கள் மனதில் அந்த எண்ணத்தை கொண்டுபோய் உங்களுக்கு முன்பாக சேர்த்து விடும்..நீங்கள் என்ன எண்ணத்தை எண்ணினீர்களோ அதற்க்கு உங்கள் மனதில் தோன்றிய எண்ணத்தை போல பதில் அளிக்க மேனேஜர் தயாராகிவிடுவார்..உங்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றியதும் இல்லாமல் உங்கள் சக ஊழியர் மனதிலும் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றுவதற்கு நீங்கள் காரணம் ஆகிவிட்டீர்கள்..இரண்டு பேரின் எண்ணமும் சேர்ந்து மேனேஜர் அதே போல பதில் அளிக்க அவரை தயாராக்கிவிட்டார்கள்.. இப்படிதான் நீங்கள் எண்ணுவதெல்லாம் உங்கள் எண்ணத்தை எதை குறித்து செயல் படுத்த எண்ணுகின்றீர்களோ அதில் சிறிதளவு சந்தேகமோ..தயக்கமோ.. இருந்தாலும் அதில் வெற்றி ஏற்படாது..என்பதே உண்மை..எனவே, எப்பொழுது சுபமான எண்ணங்கள்தான் வெற்றி அடையும்..மேலும் என்னும் எண்ணத்தில் நிச்சய புத்தி வேண்டும்.. இல்லாவிட்டால் தோல்வியே மிஞ்சும்.. எண்ணத்தில் சிவபெருமானை ஜோதியாக நினைத்து நாம் செய்யும் காரியத்திற்க்கோ, செயலுக்கோ சக்தியை கொடுத்துவிட்டு ஆரம்பித்தால் எல்லாம் சுபம்..வாழ்த்துக்கள்.. எண்ணத்தில் சிவபெருமானை ஜோதியாக வைத்து வெற்றியடைய....

Comments
Post a Comment