பிளாஸ்டிக்கு தடை
ஆகஸ்டு 15க்கு பிறகு பிளாஸ்டிக் தடை - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி
ஆகஸ்டு 15 ஆம் தேதிக்குப் பிறகு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆட்சியர்
பொன்னையா, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சில்லறையாக விற்க தடை என்றுள்ளார். அத்துடன்
மொத்தமாக விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு கடும் அபராதம்விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு அலுவலகங்களில், "நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளது' என எழுதப்பட்டுள்ள பலகைகளை வைக்க
வேண்டுமெனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல் மதுக்கடைகள், வணிகப் பகுதிகள், கோயில்கள், நீர்நிலைப்
பகுதிகள், தனியார் அலுவலகங்கள், இதர பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment