ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
*ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி*
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஹாக்கி போட்டியில் அசத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என, முழுமையாக கைப்பற்றியது.
இந்தியா வந்த நியூசிலாந்து ஹாக்கி அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது.
துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 8வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங் 'பெனால்டி கார்னர்' மூலம் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ருபிந்தர் 'பாஸ்' செய்த பந்தில் சுரேந்தர் ஒரு கோலடித்து கைகொடுத்தார். முதல் 30 நிமிடங்களின் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலை வகித்திருந்தது.
இரண்டாவது பாதியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு மன்தீப் சிங் (44வது நிமிடம்), ஆகாஷ்தீப் சிங் (60வது) தலா ஒரு கோலடித்து உதவினர். கடைசி வரை போராடிய நியூசிலாந்து வீரர்களால் ஒரு கோல் கூட பதிவு செய்ய முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.

Comments
Post a Comment