கலைஞர் உடல்நிலை சீராக உள்ளது
கலைஞர் உடல்நிலை சீராக உள்ளது
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது , மருத்துவ சிகிச்சையில் உடல் நிலை சீராகியுள்ளது என காவேரி மருத்துவமனை நேற்று இரவு 9.50 க்கு அறிக்கை வெளியிட்டது..
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது , முதல்வர் இன்று சேலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று இரவே சென்னை திரும்பினார்..
திமுக தொண்டர்கள் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய தொடர்ந்து காவேரி மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளனர் , அவர்கள் கலைஞர் நலம் பெற வேண்டும் என தொடர்ந்து கோஷங்களை எழுப்பியும் , பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்...
தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 6 ஆயிரம் ஆயுதப்படை போலீசார் உட்பட சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Comments
Post a Comment