காலா - சினிமா விமர்சனம்...
சினிமா விமர்சனம் : காலா என்கிற கரிகாலன்...
பெரும் சர்ச்சை எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ளது ரஜினியின்
" காலா"
கபாலி பட இயக்குனர் ரஞ்சித் தான் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்...
நிலம் எங்கள் உரிமை எனப் போராட வைக்கும் மக்கள் தலைவனின் கதையே 'காலா'.
தாராவி பகுதியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்திவிட்டு சொகுசான கட்டிடங்கள் கட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறது ஒரு கார்ப்பரேட் கும்பல். அதற்கும் சிலர் இணங்க, அதன் ஆபத்தை அறிந்து முட்டுக்கட்டை போடுகிறார் ரஜினி. இதனால் எம்.எல்.ஏவாக தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவிய சம்பத் சில வில்லங்க வேலைகளைச் செய்ய எந்தத் தப்பும் செய்யாத ஓர் இளைஞனின் உயிர் பறிபோகிறது.
ரஜினி இதற்கான விலையாக சம்பத்துக்கு பெரும் தண்டனையை அளிக்கிறார். இந்த சூழலில் தாராவியைக் கைப்பற்றத் துடிக்கும் கார்ப்பரேட் மூளையாக இருக்கும் நானா படேகர் ரஜினியை சந்தித்து எச்சரிக்கிறார். அந்த மோதல் வலுக்க, ஒரு பிடி மண் கூட இந்த தாராவி மண்ணில் இருந்து எடுத்துக்கொண்டு போக முடியாது என்று ரஜினி சவால் விடுகிறார். இதனிடையே ரஜினியைத் தீர்த்துக் கட்ட சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இதில் தாராவி என்ன ஆனது, நானா படேகரின் கனவு நனவாகிறதா, ரஜினி என்ன ஆகிறார் என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
ஈஸ்வரிராவின் இயல்பான நடிப்பு மனதை தொடுகிறது. ரஜினியை மாமா மாமா என்று கொஞ்சுவதில் தொடங்கி , பிள்ளைகளிடம் புலம்புவது முதல் மிக அருமையான நடிப்பு. ஹூமாவை சக்களத்தி வடிவத்தில் பார்த்தாலும் தனது கணவர் மேல் அவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை தனது நடிப்பில் வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.
ஹூமாவின் கேரக்டர் முரண்பாடாகவும், கதையிடன் ஒன்றாமலும் உள்ளது. முன்னாள் காதலியாகவும், திடீரென வில்லியாகவும் பின்னர் புரட்சியாளராகவும் மாறுவதை ஏற்று கொள்ளவில்லை. சமுத்திரக்கனியின் கேரக்டரில் காமெடியும் நக்கல்தனமும் கலந்திருப்பதால் ரசிக்க முடிகிறது. இருந்தாலும் இவரை இன்னும் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம்.
ரஜினிக்கு இணையான ஒரு மாஸ் நடிகரான நானா படேகரை இந்த படத்தில் இயக்குனர் வீணடித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். ரஜினியுடன் அவர் மோதும் காட்சிகளில் மாஸ் இல்லை. இதனால் படத்தின் விறுவிறுப்பும் குறைகிறது.
வத்திக்குச்சி' திலீபன், அஞ்சலி பட்டேல், சம்பத்ராஜ், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, ஆகியோர்களுக்கு சின்ன சின்ன கேரக்டர் என்றாலும் கதையுடன் கூடிய கேரக்டர் என்பதால் நடிப்பும் குறிப்பிடும்படியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை படத்தின் போராட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது. 'கண்ணம்மா' பாடல் தவிர மற்ற அனைத்து பாடல்களிலும் புரட்சிதான்.
முரளியின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளில் அதிரடியும், தாராவியின் குடிசை பகுதியை காட்டுவதில் அற்புதமும் உள்ளது. குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் 'பாலம்' சண்டைக்காட்சியில் கேமிரா அபாரம். படத்தின் நீளம் 167 நிமிடங்கள் என்பதை எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் நிச்சயம் குறைத்திருக்க வேண்டும். குறிப்பாக இரண்டாம் பாதியின் இடைவிடாத போராட்டக்காட்சிகள் போரடிக்கின்றது.
இயக்குனர் ரஞ்சித் ஒரு டாகுமெண்டரி படம் போல 'நிலம் எங்கள் உரிமை' என்ற அவரது சொந்த கருத்தை ரஜினியின் படத்தில் திணித்து உலகிற்கு சொல்வதில் வெற்றி பெற்றுவிட்டார். ரஜினி படத்தில் சொன்னால்தான் இந்த கருத்துக்கள் உலகிற்கு போய் சேரும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் ரஜினியின் படத்தை புரட்சிக்கருத்தை எதிர்பார்த்து யார் வருவார்கள் என்று யோசிக்க தவறிவிட்டார். ரஜினியின் மாஸ் காட்சிகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நானாபடேகர், ரஜினி மீட்டிங் காட்சியில் ரஜினி அடிவாங்கிவிட்டு பேசாமல் திரும்பி வருவதை எந்த ஒரு ரஜினி ரசிகரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். கிளைமாக்ஸில் கூட ரஜினியின் ஆக்சனை அடக்கி வைத்து அப்படி என்ன கதையை சொல்ல வேண்டும் என்று ரஞ்சித் நினைத்துள்ளார் என்பது கடைசி வரை புரியவில்லை
மொத்தத்தில் 'காலா' ரஜினியின் மாஸ் காட்சிகளை மிஸ் செய்துள்ள ஒரு ரஞ்சித் படம்
ரேட்டிங்: 2.5/5
நன்றி : தி இந்து
நன்றி : WEBDUNIA.COM

Comments
Post a Comment