உள்ளாட்சி - அலுவலர் பணி நீட்டிப்பு நன்றி : தினமலர் ( m.dinamalar.com) நாள் : 29.6.18 உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள, தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் சட்டம், சட்டசபையில், நேற்று, எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு இடையில், நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறா ததால், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக் கும், தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதவி காலம், நாளை நிறைவடை கிறது. பதவி காலத்தை நீட்டிக்க, அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படை யில், மறுவரையறை செய்யும் பணி நடந்து வருகிறது. இதனாலும், பல்வேறு நீதிமன்ற வழக்குகளாலும், உள்ளாட்சி தேர்தல் தாமதப் பட்டுள்ளது. வார்டு வரையறை முடிந்த பின், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட இயலும். எனவே, தனி அலுவலர்களின் பதவி காலத்தை, மேலும், ஆறு மாதங்களுக்கு, டிச., 31 வரை அல்லது தேர்தல் முடிந்து உள்ளாட்சி அமைப்பு களின் முதல் கூட்டம் நடைபெறும் வரை, ...