POSITIVE ENERGY - PART 8 - ஆழ்மன தியானம்
"ஆழ்மனத்தின் அற்புத சக்தி" -
ஆழ்மனத்தின் சக்திகொண்டு சொத்துக்களை குவிப்பது எப்படி ?
1. என்றும் பிறழாத உங்கள் ஆழ்மனத்தின் துணையுடன், செல்வத்தை எளிய வழியில் உருவாக்க முடிவு செய்யுங்கள்.
2. வியர்வை சிந்திக் கடினமாக உழைத்துச் செல்வத்தைக் குவிக்க முயற்சிப்பது, இடுகாட்டிலேயே பெரும் பணக்காரனாகத் திகழ்வதற்கான ஒரு வழி. நீங்கள் அதிக முயற்சி எடுக்கவோ அல்லது அடிமை போன்று கஷ்டப்படவோ தேவையில்லை.
3. செல்வம் என்பது உணர்வுபூர்வமான உறுதியான நம்பிக்கை. செல்வத்தைப் பற்றிய எண்ணத்தை உங்கள் ஆழ்மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
4. பெரும்பாலான மக்களின் பிரச்சனை, அவர்களுக்குத் துணைபுரியும் கண்ணுக்குப் புலப்படாத கருவிகள் அவர்களிடம் இல்லாததுதான்.
5. உறங்கச் செல்லுமுன், “செல்வம்,’’ என்னும் வார்த்தையை மெதுவாகவும் அமைதியாகவும் சுமார் ஐந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து சொல்லுங்கள். உங்கள் ஆழ்மனம் செல்வத்தை உங்களிடம் கொண்டுவந்து குவிக்கும்.
6. செல்வத்தைப் பற்றிய உணர்வு செல்வத்தை உருவாக்கும். இதை எல்லா நேரத்திலும் மனத்தில் இருத்துங்கள்.
7. உங்கள் வெளிமனமும் ஆழ்மனமும் ஒத்துப் போக வேண்டும். நீங்கள் உண்மை என்று உணர்வதை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக் கொள்ளும். ஆதிக்கமான எண்ணம் உங்கள் ஆழ்மனத்தால் எப்போதும் ஒப்புக் கொள்ளப்படும். ஆதிக்க எண்ணம், செல்வம் பற்றியதாக இருக்க வேண்டும், ஏழ்மை பற்றி இருக்கக் கூடாது.
8. “நான் பகலிலும் இரவிலும் என் அனைத்து விருப்பங்களிலும் விருத்தி அடைந்து கொண்டிருக்கிறேன்,’’ என்று அடிக்கடி சுயபிரகடனம் செய்வதன் மூலம், உங்களால் செல்வத்தைப் பற்றிய அனைத்து விதமான மன முரண்பாடுகளிலிருந்தும் மீள முடியும்.
9. இவ்வாசகத்தை மீண்டும் மீண்டும் தொடர்ந்து கூறுவதன் மூலம் உங்களுடைய வியாபாரத்தை அதிகரிக்கலாம்: “என் வியாபாரம் ஒவ்வொரு நாளும் விருத்தியடைகிறது. நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து முன்னேறுகிறேன், அதிக செல்வந்தனாகிறேன்.’’
10. “வாழ்க்கை நடத்த, போதிய அளவு பணம் இல்லை,’’ அல்லது “பற்றாக்குறை உள்ளது,’’ என்பது போன்ற, எதுவும் எழுதப்படாத காசோலையில் கையெழுத்திடாதீர்கள். இது போன்ற வாசகங்கள் உங்கள் நஷ்டத்தைப் பெருக்கிப் பன்மடங்காக்கும்.
11. செழிப்பு, செல்வம், மற்றும் வெற்றி குறித்த எண்ணங்களை உங்கள் ஆழ்மனத்தில் சேமியுங்கள். அது உங்களுக்குக் கூட்டு வட்டி வழங்கும்.
12. நீங்கள் விழிப்புணர்வுடன் கூறும் சுயபிரகடனத்தை, சில கணங்களுக்குப் பிறகு மனத்தளவில் மறுக்கக்கூடாது. இது நீங்கள் நல்லவற்றை வேண்டிக் கூறிய சுயபிரகடனத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.
13. உங்களது செல்வத்திற்கான உண்மையான மூலம், உங்கள் மனத்திலுள்ள யோசனைகளை உள்ளடக்கியுள்ளது. பல இலட்சம் டாலர்கள் மதிப்புள்ள ஓர் யோசனை உங்களுக்குக் கிடைக்கலாம். உங்கள் ஆழ்மனம் நீங்கள் நாடும் யோசனையை உங்களுக்குக் கொடுக்கும்.
14. பொறாமையும் வயிற்றெரிச்சலும், பாய்ந்து வரும் செல்வத்துக்குத் தடை போடும் முட்டுக்கட்டைகள். மற்றவர்களின் செல்வச் செழிப்பில் மகிழ்ச்சியடையுங்கள்.
15. செல்வத்திற்குத் தடை உங்கள் மனத்தில்தான் உள்ளது. நீங்கள் மனத்தளவில் மற்றவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதன் மூலம் இத்தடையை உடைத்தெறியலாம்.
- Dr.ஜோசப் மர்பி
படியுங்கள் ..உணருங்கள்..பயன்பெறுங்கள்...பகிருங்கள்...
நன்றி.நன்றி..நன்றி...

Comments
Post a Comment