POSITIVE ENERGY - PART 4
POSITIVE ENERGY - PART 4
*"நல்ல எண்ணங்களை விதை"*
Image :everyday positive quote.com
*"நல்ல எண்ணங்களை விதை"*
Image :everyday positive quote.com
ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.
அதில் தாழ்வு எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள், பலவீனமான எண்ணங்கள், முரட்டு எண்ணங்கள், அன்பு, தெய்வீகம் என பல உயர்ந்தும், அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில்தான் உருவாகின்றன.
மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது.
இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.
நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.
உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.
தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத்தான் அறிவு தரும்.
நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.
எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.
நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து, மட மாளிகை, புது மாடலான வண்டி வாகனங்கள், பொன் பொருள் என வாழ்கையில்சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி, பயிரிடுகிறார்கள்.
எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து, போட்டி, பொறாமை, புறம் பேசுதல், பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல், உண்மையாக உழைத்தல், எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள்.
இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும், உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.
எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?
ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்துதானே!
மனம் எண்ணியதினால்தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.
ஒரு எண்ணத்தை நம்பிகயுடேன் பலமுறை மனதில் நினைத்தால், அது நல்லதோ, கேட்டதோ அது நடந்தே தீரும்.
ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால்தான்,
"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்" என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள்.
உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி.
மன வலிமை வளர்த்தால் மனம் வளம் பெறும்.
Comments
Post a Comment