முற்றுகை போராட்டம் !!!
*🔴🔴ஜாக்டோ- ஜியோ போராட்டம் அறிவிப்பு எதிரொலி : போக்குவரத்து நிறுத்தம்*
*சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ- ஜியோ அறிவித்ததன் எதிரொலியாக தலைமை செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. போர் நினைவுச் சின்னம் முதல் தலைமை செயலகம் வரையிலான சாலை மூடப்பட்டுள்ளது. தலைமை செயலகம் செல்லும் அனைத்து சாலைகளும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டது. ரிசர்வ் வங்கி, போர் நினைவு சின்னத்தில் இருந்து கோட்டைக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளது.*
Comments
Post a Comment