சென்னை சூப்பர் கிங்ஸ் - வெற்றி
ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரில் சென்னை அணி கோப்பை வென்றது. ஐதராபாத் அணிக்கு எதிரான பைனலில் வாட்சன் சதம் விளாச 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரின் பைனல் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹர்பஜனுக்குப்பதில் கரண் சர்மா வாய்ப்பு பெற்றார். ஐதராபாத் அணியில் சகா (காயம்), கலீல் அகமது நீக்கப்பட்டு கோஸ்வாமி, சந்தீப் சர்மா இடம்பிடித்தனர்.
யூசுப் விளாசல்
ஐதராபாத் அணிக்கு கோஸ்வாமி (5) ஏமாற்றினார். ஜடேஜா பந்தில் தவான் (26) ஆட்டமிழந்தார். கரண் சர்மா 'சுழலில்' கேப்டன் வில்லியம்சன் (47) அவுட்டானார். சாகிப் 23 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் 'மின்னல்' வேகத்தில் ரன் குவித்தார். இவருக்கு கார்லோஸ் பிராத்வைட் பங்களிப்பு கிடைக்க, 'ஸ்கோர்' சிறப்பாக உயர்ந்தது. தாகூர் பந்தில் பிராத்வைட் (21) சிக்கினார். முடிவில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. யூசுப் (45) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக லுங்கிடி, கரண் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
வாட்சன் மிரட்டல்
எட்டிவிடக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுபிளசி (10) சொதப்பினார். பின், இணைந்த வாட்சன், ரெய்னா அபாரமாக விளையாடினார். சந்தீப் வீசிய 13வது ஓவரில் மிரட்டிய வாட்சன் 3 சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார். பிராத்வைட் பந்தில் ரெய்னா (32) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய வாட்சன், ஐ.பி.எல்., அரங்கில் 4வது சதத்தை பதிவு செய்தார். ராயுடு ஒரு பவுண்டரி அடிக்க, சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் (117), ராயுடு (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
3 முறை சாம்பியன்
சென்னை அணி மூன்றாவது முறையாக (2010, 11, 18) கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம், ஐ.பி.எல்., தொடரில் அதிக பட்டம் வென்ற அணிகளின் வரிசையில் மும்பையுடன் (3) முதலிடத்தை பகிர்ந்து கொண்டது.
2வது சதம்
இந்த 'சீசனில்' சென்னையின் வாட்சன் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். இதற்கு முன், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி இருந்தார். ஒட்டுமொத்தமாக, இந்த 'சீசனில்' பதிவான 5வது சதம் இது.

Comments
Post a Comment