புதிய பாடத்திட்டம் வெளியீடு - ஆசிரியர்களுக்கு பயிற்சி
1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளின் புதிய பாட புத்தகங்கள் வெளியீடு!
முதலில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. மற்ற வகுப்புகளுக்கு, அடுத்த கல்வியாண்டில், புதிய பாடப்புத்தகம் அறிமுகம் செய்யப்படும். புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ப, மாணவர்களுக்கு பாடம் நடத்த, ஜூன், 1 முதல், 15 வரை, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பள்ளிக் கல்வியில், 12 ஆண்டுகளாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. ஒன்று முதல், 10 வரையிலான வகுப்புகளுக்கு, 10 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாறாமல் இருந்தது. இதை மாற்ற, கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஓராண்டுக்கு முன், பள்ளிக் கல்வி அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றதும், அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினர். பிளஸ் 2 வரை, அனைத்து
பாடத்திட்டத்தையும் மாற்ற, உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டது. அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர், குழுவில் இடம் பெற்றனர்.
அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைவராகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி, உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டு, பாடத்திட்ட தயாரிப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கான அரசாணை, 2017 மே, 22ல் பிறப்பிக்கப்பட்டு, பணிகள் துவங்கின.
இதையடுத்து, கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த வரைவு திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, 2017 நவ., 20ல் வெளியிட்டார். அது தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு, ஜனவரியில் புதிய பாடத்திட்டம் தயாரானது. பின், பல்வேறு பள்ளி, கல்லுாரிகள், உயர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மூலமாக, புதிய பாட புத்தகங்கள் எழுதப்பட்டன.
இந்த பணிகள் அனைத்தும், பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில் நடந்தன. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்களை, முதல்வர் பழனிசாமி, நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பாடத்திட்ட தயாரிப்பு உயர் மட்டக் குழு, கலைத் திட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
புதிய புத்தகங்கள், நவீன முறையில் வண்ணமயமாக அச்சடிக்கப்பட்டுள்ளன. மாணவர்களை எளிதில் ஈர்க்கும் வகையில், சித்திரம், படக்கதை, உதாரணங்கள் இடம் பெற்றுள்ளன. நவீன இலக்கியம், நவீன தொழில்நுட்பம், தமிழர்களின் அன்றைய, இன்றைய கலாசாரம், கல்வியில் உயர்ந்த தமிழர்கள், சாதனையாளர்கள் குறித்து, புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
&'பார்கோடு, வீடியோ&' பாடங்களுக்கான இணையதள இணைப்பு, மொபைல் போன் செயலி என, நவீன தொழில்நுட்பங்கள் வழியாகவும், பாடங்கள் நடத்தப்பட உள்ளன. வேலைவாய்ப்பு தகவல், போட்டி தேர்வுகள் விபரம், உயர் கல்வி வாய்ப்புகள் பற்றியும், பாடவாரியாக விஷயங்கள் உள்ளன.
&'இந்த பாட புத்தகங்கள், வரும் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டத்தை மிஞ்சும் வகையில் இருக்கும்&' என, பாடத்திட்ட குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிய பாடத்திட்டத்தை, மாணவர்களிடம் சேர்க்க, ஆசிரியர்களுக்கு, ஜூன், 1 முதல், 15 வரை, சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
செய்தி : தினமலர்
நாள் : 06.05.18

Comments
Post a Comment