நீட் தேர்வு - சோகம்..
நீட் தேர்வு எழுதுவதற்காக, திருத்துறைப்பூண்டியில் இருந்து, மகனை அழைத்துக் கொண்டு, கேரள மாநிலம், எர்ணாகுளத்திற்கு சென்ற தந்தை, மாரடைப்பால் இறந்தார். தந்தை இறந்தது தெரியாத நிலையில், மாணவர் தேர்வை எழுதி முடித்தார்.
மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்த, தமிழக மாணவர்களுக்கு, கேரளாவில், அதிக மையங்கள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த, 5,350 பேருக்கு, கேரளாவில், எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில், தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. எர்ணாகுளத்தில் உள்ள, நாளந்தா பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில், ஏராளமான தமிழக மாணவர்கள் நேற்று தேர்வு எழுதினர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, விளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 48; அரசு கிளை நுாலகத்தில் நுாலகராக இருந்தார். மனைவி பாரதி மகாதேவி, 43; அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை. இவர்களுக்கு, கஸ்துாரி மகாலிங்கம், 17, என்ற மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர்.
மகாலிங்கம், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு, எர்ணாகுளம், நாளந்தா பள்ளியில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம், மகனுடன் கிருஷ்ணசாமி எர்ணாகுளம் சென்றார். தந்தையும், மகனும், எர்ணாகுளத்தில் உள்ள, 'ஏர்லைன்ஸ்' என்ற தனியார் தங்கும் விடுதியில், அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினமே, தேர்வு நடக்கும் மையத்துக்கு நேரில் சென்று, முகவரியை சரிபார்த்து வைத்தனர்.
நேற்று காலை, மாணவன் மகாலிங்கம் மட்டும், 'ஏர்லைன்ஸ்' ஓட்டலில் தனியே அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த இஸ்மாயில் என்ற தமிழகத்தைச் சேர்ந்தவர், மாணவனிடம், 'ஏன் தனியாக இருக்கிறாய்; அப்பா வரவில்லையா' என கேட்டுள்ளார். மகாலிங்கம், 'அப்பாவுக்கு ரத்த அழுத்தம் குறைந்து சிரமப்படுகிறார்; தேர்வு எழுத செல்ல முடியாது போலிருக்கிறது' என தெரிவித்துள்ளார்.
மாணவரை தேர்வு எழுதும்படி அறிவுறுத்திய இஸ்மாயில், மகாலிங்கத்தை, தானே தேர்வு மையத்துக்கு அழைத்து சென்று விட்டார். இதற்கிடையே, விடுதியில் கிருஷ்ணசாமியின் உடல் நிலை மோசமாக, அவரை, ஓட்டல் மேனேஜர் முருகானந்தம் உதவியுடன், எர்ணாகுளத்தில் உள்ள சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி, கிருஷ்ணசாமி உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல், எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல், நாளந்தா பள்ளி முன் நின்றிருந்த, மற்ற மாணவர்களின் பெற்றோர் மத்தியில் பரவியது. மாணவர் மகாலிங்கம், தந்தை இறந்தது தெரியாமல், தேர்வை எழுதி கொண்டிருந்தார். தேர்வு முடியும் வரை, அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
தேர்வு முடிந்த பின், மாணவர்களை வெளியே அனுப்பாமல், 30 நிமிடங்கள் உள்ளேயே அமர வைக்கப்பட்டனர். கேரளா போலீசார் தேர்வு மையத்திற்குள் சென்று, மாணவர் மகாலிங்கத்தை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். உறவினர்களுக்கு தகவல் அளித்ததன்படி, மகாலிங்கத்தின் மாமா அன்பரசன், திருப்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு பகல், 3:30 மணிக்கு வந்தார். மாமாவை பார்த்ததும், மாணவர் மகாலிங்கம் கதறி அழுதார்.
கேரள முதல்வர், பினராயி விஜயன் உத்தரவின்படி, எர்ணாகுளம் கலெக்டர் முகமது ஸபிருல்லா, எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு வந்து, சட்டரீதியான பணிகளை தீவிரப்படுத்தினார். கிருஷ்ணசாமி இயற்கை மரணம் அடைந்துள்ளதால், அவரது உடல், பரிசோதனை செய்யப்படவில்லை.
இதையடுத்து, கிருஷ்ணசாமியின் உடல், கேரள அரசு மருத்துவமனை வாகனத்தில், மாலை, 4:00 மணிக்கு தமிழகத்துக்கு புறப்பட்டது. மாணவர் மகாலிங்கம், செஸ் விளையாட்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, பரிசுகள்
பெற்றுள்ளார். அவரை, பெரிய செஸ் சாம்பியன் மற்றும் டாக்டராக்க, அவரது தந்தை தீவிர முயற்சி மேற்கொண்டதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.
அப்பா எங்கே? மாணவரை, போலீசார் அழைத்து சென்ற போது, பள்ளியின் வாசலில் காத்திருந்த இஸ்மாயிலிடம், 'அப்பா எங்கே' என மகாலிங்கம் கேட்டார். இதை பார்த்து, அங்கிருந்த மற்ற பெற்றோர் கண்கலங்கினர். அதன் பிறகே போலீசார், அப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறி, மகாலிங்கத்தை அழைத்து சென்றனர்.
நன்றி
செய்தி : தினமலர்
நாள் : 7.5.18

Comments
Post a Comment