இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
File image : Seithi.com
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறக்கூடும். அதனைத் தொடர்ந்து தெற்கு ஓமன் மறறும் வடக்கு ஏமன் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்புகள் ஏதும் இல்லை.
தெற்கு இலங்கை அருகேயும், வட தமிழகத்தின் உள் பகுதியிலும் இரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவி வருகின்றன. இவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தனர்.

Comments
Post a Comment