கணிணி அறிவோம் - பகுதி 6 - வாட்ஸ்அப் வைரஸ்
*பரிமாற்றம்: ஆறு*
வணக்கம்.
சென்ற பரிமாற்றத்தில் Data theft குறித்துப் பேசியிருந்தோம்.
சென்ற பரிமாற்றத்தின் doubt பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம்.
சென்ற பரிமாற்றத்தின் நடுவே ஓரிடத்தில் hackersகளின் இரண்டு முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக appகளை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்ததே, அந்த மற்றொரு ஆயுதம் என்ன? அதிலிருந்து நான் எப்படி என்னை, என் deviceஐ காத்துக்கொள்வது? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அந்த மற்றொரு ஆயுதமானது நாம் தினம் தினம் பயன்படுத்தும் மிகவும் பயனுள்ள ஊடகம் Whats App !
ஆம். மக்களின் இணையதளப் பயன்பாட்டினை தளமாய்க் கொண்டு இந்தத் தகவல் திருடர்கள் செயல்பட்டு வந்தனர்.
அதன் பின் தான் எதிர்பாராத விதமாக இணையப் பயன்பாடு வேறு பக்கம் திரும்பியது ! அது தான் Whats App !
இந்த Whats App எனப்படும் செயலி இணையத்தைப் பயன்படுத்தி நாம் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வழிவகுக்கிறது. அதுவரை SMS, Email என மெதுவாய்ச் சுழன்று கொண்டிருந்த உலகம் வெகு விரைவாக சுழல ஆரம்பித்தது.
நாமும் நம்மை அறியாமலேயே அதைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். இணையவழிக் குற்றங்கள் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடும் நபர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. அது வரையில் இணையம் பயன்படுத்தாத பல பேர் Whats App பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
இந்த வகைத் திருடர்களுக்கு அவர்களின் வேலை மிகவும் எளிதாக ஆகிவிட்டது. நாம் அனைவரும் இதுவரை ஒரே முறைகூட இவர்களின் வலையில் விழாமலிருந்திருக்க முடியாது.
*எப்படி?*
நாம் அனைவரும் பல்வேறு குழுக்களில் தினம் தினம் சில மெசேஜ்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
JIO DHAMAKHA OFFER, COLORFUL WHATS APP, GOLDEN WHATS APP FREE, LIMITED PERIOD FREE OFFER எனப்பல.
இதை எத்தனை பேர் க்ளிக் செய்யாமல் இருந்திருக்கிறோம்?
இதில் என்ன ஒளிந்துள்ளது என எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்திருக்கிறோம்? தேவையே இன்றி எவனொருவன் இதற்கென ஒரு இணையதளத்தை செயல்பட வைத்து அதன் லிங்க்'ஐ அனைத்து குழுக்களிலும் அனுப்பி, உங்களையும் அனுப்பச் சொல்லி, அனுப்பினால் உங்களுக்கு சில இலவசங்கள் எனச் சொல்லி அந்த குறிப்பிட்ட லிங்க் உள்ள மெசேஜை அனைவருக்கும் அனுப்ப வைக்கிறார்கள்.
என்ன தான் நடக்கிறது?
நாம் அந்த லிங்க்'ஐ க்ளிக் செய்தவுடன் அது நம்மை ஒரு இணையதளத்திற்கு அழைத்துச் செல்கிறது. அத்தோடு அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறி விடுகிறது. அவர்கள் நினைத்த websiteஐ உங்களை, உங்கள் மொபைல் போனிலேயே திறக்க வைத்தாகிவிட்டது. அதன் மூலம் உங்கள் மொபைலில் அவர்கள் நினைக்கும் வைரஸ்களை நொடிப்பொழுதில் தரவிறக்கம் செய்துவிடுகிறார்கள். அதன் பின் அது தன் வேலையை ஆரம்பித்துவிடுகிறது. உங்கள் மொபைலில் உள்ள personal photos, videos, deleted photos, deleted videos, PDF files and other documents, your SMS, phone calls, video calls போன்றவை அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. வங்கி தொடர்பானவையோ அல்லது உங்களது பர்சனல் தொடர்பானவையோ எப்படியிருந்தாலும் அவர்கள், திருடப்பட்ட அந்த தகவல்களை கள்ளச் சந்தையில் (black market)ல் விற்கிறார்கள். இணையத்தில் வெளியாகும் பலரின் பர்சனல் images/videos பெரும்பாலும் இவ்வாறு வெளியாகுபவையே. (இது ஆசிரியர்களுக்குத் தொடர்பற்றதாக இருந்தாலும் மற்றவர்களுக்கு பரிமாறிக்கொள்ள நிச்சயம் உதவும் என்பதாலேயே பதிவிடப்படுகிறது).
இனியாவது இது போன்ற லிங்க்'ஐ what's app இலோ Facebookஇலோ இது போன்ற லிங்க்' களை க்ளிக் செய்யாமலிருந்தால் உங்கள் deviceம், அதில் உள்ள தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.
இது தொடர்பான ஒரு பதிவை என் blog பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். அதில் எளிதாய் விளக்கும் ஒரு வீடியோவும் இணைத்துள்ளேன்.
https://ramyantamil.blogspot.in/2017/10/warning-whats-app-scamsviruses-protect.html?m=1
எனும் முகவரியைக் க்ளிக் செய்து அதன் விவரங்களை வீடியோவுடன் தெரிந்துகொள்ளுங்கள், அதில் உள்ள மற்ற பதிவுகளையும் படித்துப் பாருங்கள்.
விவரமானவர்களுக்கு இந்நேரம் ஒரு சந்தேகம் வந்திருக்கும். 'Whats Appல் வரும் லிங்க் ஐ க்ளிக் செய்யக்கூடாதெனச் சொல்லிவிட்டு நீங்களே ஒரு லிங்க் அனுப்புகிறீர்களே' என...
கவலையே படாதீர்கள். எந்த இணையத்தின் முகவரி https என ஆரம்பித்தாலும் அதில் dangerous ஆன எதுவும் இல்லையேன அர்த்தம். ஏனெனில் http என்பது hyper text protocol என்பது மட்டுமே. ஆனால் https என்பது hyper text protocol for secured communication என்பதாகும். அதனால் என் blog link ஐ தைரியமாய் க்ளிக் செய்யுங்கள்.
அதில் *'என்ன தான் செய்கிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்?'* எனும் கட்டுரையை எழுதியுள்ளேன். அதில் ஆசிரியர்களின் கணினிப் பயன்பாடு பற்றியும், தகவல் தொழில்நுட்ப ஆர்வமும், தெளிந்த அறிவு தொடர்பாகவும் இணைக்கலாம் எனவே தோன்றுகிறது. உங்களுக்கு ஏதேனும் தெளிவு ஏற்பட்டிருப்பின் சொல்லுங்கள். அதையும் அக்கட்டுரையில் சேர்ப்போம்.
பத்திரிக்கை நண்பர்கள் குறிப்பெடுத்து வைக்கவும். நிச்சயம் பயன்படும்.
Doubt:
இதெல்லாம் சரி, இதுவரையிலான ஆறு பரிமாற்றங்களில் மொபைல் குறித்தும், கணினி குறித்தும் தொடக்க பயன்பாட்டு முன்னறிவை எட்டியது போலத் தோன்றுகிறதே, இனி எங்கிருந்து நம் பயன்பாட்டை ஆரம்பிக்கப் போகிறோம்?
பதில்: அடுத்த பரிமாற்றத்தில்...
எழுத்தாக்கம்
அருண் மனோகர்,
வேலூர்...
Comments
Post a Comment