கணிணி அறிவோம் - பகுதி 5 - DATA THEFT
கணிணி அறிவோம் - பகுதி 5
Click here for part 4,3,2&1
பரிமாற்றம்: ஐந்து
தலைப்பு: Data theft
வணக்கம்,
பதில்:
அடுத்த பரிமாற்றத்தில்...
எழுத்தாக்கம்
அருண் மனோகர்,
வேலூர்..
Click here for part 4,3,2&1
பரிமாற்றம்: ஐந்து
தலைப்பு: Data theft
வணக்கம்,
சென்ற பரிமாற்றத்தில் anti virus usage குறித்துப் பேசியிருந்தோம்.
சென்ற பரிமாற்றத்தின் doubt பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம்.
நாம் antivirus install செய்வதன் மூலம் மட்டும் நம் mobile/computer safeஆக இருந்துவிடாது. Data theft எனப்படும் தகவல் திருட்டிலிருந்து முழுமையாக தப்பித்துவிடவே முடியாது.
நிறுத்துங்கள்.
நீங்கள் இந்த மெசேஜை மொபைல் வழியாகவோ, கணினி வழியாகவோ படித்துக்கொண்டிருந்தால் நீங்கள் பயன்படுத்தும் device உங்கள் கட்டுப்பாட்டில் தான் 100% இருக்கிறதா என ஒரு நிமிடம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். நம்மில் பலர் password எல்லாம் போட்டு lock செய்து வைத்திருப்பதால் என் மொபைலோ, லேப்டாப்போ என்னை மீறி யாரும் access செய்ய முடியாதென நினைத்துக்கொண்டிருக்கலாம்.
இன்றல்ல, நேற்றல்ல என்றுமே உங்கள் deviceஐ 100% உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது.
பல நேரங்களில் போலி ATM cardகள் தொடர்பான புகார்களை ஊடகங்கள் ஒளிபரப்பி பார்த்திருப்போம். அவையெல்லாம் பெரும்பாலும் உங்கள் மொபைல் அல்லது சிஸ்டமில் தான் ஆரம்பிக்கிறது. உங்கள் மெயில் ID, Facebook ID என இவற்றை வைத்து உங்கள் சார்ந்த தகவல்களை படிப்படியாக தகவல்களைத் திரட்டுவதில் ஆரம்பிக்கிறார்கள்.
அதில் மட்டுமில்லாமல் உங்கள் browserன் மொத்த தகவல்களும் கண்காணிக்கப்படும். இதுவுமில்லாமல் நீங்கள் install செய்து வைத்துள்ளீர்களே பலவிதமான appகள்... இவை தான் இவர்களின் மிக முக்கிய ஆயுதங்களில் ஒன்று. இவை உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலின் பல்வேறு தகவல்களைத் திருடிக்கொண்டிருக்கலாம். நம் சுந்தர் பிச்சை அவர்களின் தலைமையில் நடந்த பல்வேறு கூட்டங்களில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு இது போன்ற appகளை google நிறுவனமே முடக்கி வருகின்றது. ஆனாலும் கோடிக்கணக்கான appகள் உள்ளதால் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டி உள்ளது.
நமக்குத் தேவையான appஆக இருந்தாலும் அவற்றின் செய்ல்பாட்டுக்குத் தேவையற்ற permissionகளைக் கேட்கும் போது ஒரு போதும் 'Allow' என click செய்யாதீர்கள். அப்படி நாம் செய்வது தான் திருடன் கையில் சாவியைத் தருவதனைப் போன்றது.
அதுமட்டுமன்றி இணையத்தில் தகவல்களைத் தேட குறைந்தப்ட்சம் இரண்டு browserகளை வைத்திருங்கள். தவறாமல் அவற்றை update செய்து வைத்திருங்கள். மிக முக்கியமாக இதில் நீங்கள் செய்யவேண்டியது ஒன்று உள்ளது. உங்களுக்கு அவசியமான தகவல்களைத் தேடும்போதும், வங்கி, insurance தொடர்பான செயல்களில் ஈடுபடும் போது தவறாமல் incognito mode என அந்த optionsல் இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்துவிட்டு அதன் பின் திறக்கும் விண்டோவில் உங்கள் தேடுதலைத் தொடங்குங்கள்.
Doubt:
பரிமாற்றத்தின் நடுவே ஓரிடத்தில் hackersகளின் இரண்டு முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக appகளை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்ததே, அந்த மற்றொரு ஆயுதம் என்ன? அதிலிருந்து நான் எப்படி என்னை, என் deviceஐ காத்துக்கொள்வது?
பதில்:
அடுத்த பரிமாற்றத்தில்...
எழுத்தாக்கம்
அருண் மனோகர்,
வேலூர்..
thankyou sir
ReplyDelete