ரூ.5 லட்சம் முதல் 100 கோடி வரை கடன்..
ரூ.5 லட்சம் முதல் 100 கோடி வரை கடன்.. இனி அப்பளம், ஐஸ் கம்பெனி தொடங்கவெல்லாம் தயக்கம் வேண்டாம்!
நன்றி
Written By: Tamilarasu
www.tamil good returns.com
Image : loanspun.com
குறு மற்றும் சிறு தொழில்கள் வட்டார வளர்ச்சிக்கும், நாட்டின் நிதிநிலை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால் அவற்றுக்கான நிதியுதவிகளும், பொருளாதாரக் கைமாறுகளும் மறுக்கப்பட்டே வந்துள்ளன. சரியான தருணத்தில், போதுமான நிதி உதவிகளை வங்கிகளில் இருந்து பெறுவதில் பெரிய திண்டாட்டங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன சிறிய கடன் உதவிக்குக்கூடச் சந்தித்த இடர்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இதனால் முதல் தலைமுறை தொழில்முனைவோர் குறுதொழில்களைத் தொடங்குவதிலும், தொடங்கிய தொழில்துறையை நிர்வகிப்பதிலும் பல அபாயமான கட்டங்களைத் தாண்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மத்திய அரசு தொடங்கிய குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதித் திட்டம் :
இத்திட்டம் முதலீட்டாளர்களின் சிக்கலை தணித்துள்ளது. தற்போது தொடங்கியுள்ள புதிய நிறுவனங்கள் இதில் கடன் உதவி பெற தகுதி பெற்றவையாகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச் சகம், சிறு மற்றும் நடுத்தர நறுவனங்கள், கோல் மற்றும் சிறு தொழில் வளர்ச்சி வங்கி இணைந்து இந்த நிதி உத்தரவாத திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் இதன் நிதிநிலை இரண்டாயிரத்து 500 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
தகுதியான கடன் நிறுவனங்கள் குறு மற்றும் சிறு தொழில்களுக்குக் கடன் வழங்கத் தகுதி பெற்ற வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வகைப்படுத்தப்பட்டன. பொது, தனியார் மற்றும் வெளிநாட்டு வணிக வங்கிகள் கடன் வழங்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.குறிப்பிட்ட கிராம வங்கிகளும் கடன் வழங்குகின்றன. 26 பொதுத்துறை வங்கிகள், 21 தனியார் வங்கிகள், 72 கிராம வங்கிகள், 4 வெளிநாட்டு வங்கிகள் கடன் வழங்குகின்றன. 9 வங்கியல்லாத நிறுவனங்கள் கடன்களை வழங்கத் தகுதி பெற்றுள்ளன. டெல்லி நிதிக்கழகம், கேரளா நிதிக்கழகம், ஜம்மு காஷ்மீர் நிதிக்கழகம், ஆந்திர பிரதேச நிதிக்கழகம், இந்திய இறக்குமதி, ஏற்றுமதி வங்கி, தமிழ்நாடு தொழில்கள் முதவீட்டுக் கழகம், தேசிய சிறு தொழில்கள் கழகம், வடகிழக்கு வளர்ச்சி நிதிக்கழகம், இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
பிணையின்றிக் கடன் வசதி
இத்திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் எளிதாகக் கடன் பெறுவதற்கு விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் நபரின் பிணை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் இருப்பு மற்றும் மூலதனக்கடனாக நூறு கோடி ரூபாய் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. நலிந்த நிறுவனங்களைப் புனரமைப்பதற்காகவும் கடன் பெற்றுக்கொள்ளலாம். அரசு மற்றும் குறிப்பிட்ட முகமையின் கீழ் இயங்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரவாத விகிதம் கடன் பெறும் தொழில்முனைவோர் பாதிக்கப்படாமல் இருக்கக் கடன் பாது காப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட கடனில் அதிகபட்சமாக 85 விழுக்காடு பாதுகாப்பு உத்தரவாதத்தை இந்தத் திட்டம் வழங்குகிறது.50 லட்சம் பெற்றவருக்கு 75 விழுக்காடும், 5 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு 85 விழுக்காடும் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கிறது.நடுத்தர நிறுவன தொழில் முனைவோருக்கும், பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் 80 விழுக்காடு அளிக்கப்படுகிறது.மொத்த கடன் தொகையில் 50 விழுக்காடு உத்தரவாதம் இருந்தால் 50 லட்சத்திலிருந்து 100 லட்சம் வரை கடன் தகுதி உயர்த்தப்படுகிறது. உத்தரவாத காலம் கடன் தொகையைச் செலுத்துவதற்கு ஒப்புக்கொண்ட கால அளவு வரை உத்தரவாதம் பொருந்தும். உழைப்பு மூலதனத்துக்கு 5 ஆண்டுகள் வரை அனுமதிக்கவோ, உத்தரவாதத்தை 5 ஆண்டுகளில் தடை செய்யவோ நேரிடும். உத்தரவாத கட்டணம் கடன் தொகையைப் பொறுத்து ஆண்டுக் கட்டணமாக 1.0 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றால் 0.75 விழுக்காடும், 5 லட்சத்திலிருந்து 100 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் பெண்கள் மற்றும் குறு தொழில் முனைவோருக்கு 0.85 விழுக்காடும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தகவல்களை எப்படி அறியலாம் குறு மற்றும் சிறு தொழில் தொடங்குவோர் இதுபற்றித் தகவல்களை www.cgtmse.in இணையதளத்தில் அறிந்து கொள்ள முடியும். திட்டம் பற்றிய விழிப்புணர்வு பரப்புரைகள் இந்தத் திட்டத்தின் நோக்கம், பயன்கள் குறித்து வங்கிகள், சிறுதொழில் சங்கங்கள், ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படுகிறது.தேசிய, மாநில அளவிலும், மாவட்டங்களிலும் கருத்தரங்குகள், கருத்துப் பட்டறைகள் மூலம் விளக்கம் அளிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி மற்றும் அரசுகள் மூலமும் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.தொழில் தொடங்க விரும்புவோர் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் தொழில் நிறுவனங்களின் ஆர்வம் 2016 மே 31 ஆம் தேதிவரை 24, 31, 490 சிறு தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு உத்தரவாதம் கோரி விண்ணப்பித்தன. அவர்களுக்கு 1,13,500.61 கோடி ரூபாய் மதிப்புள்ள உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 119 நடுத்தர நிறுவனங்களின் லாப ஈட்டுத்தொகையைக் கருத்தில் கொண்டு கடன் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
Read more at: https://tamil.goodreturns.in/news/2018/05/26/credit-guarantee-fund-scheme-micro-small-enterprises-011507.html
Comments
Post a Comment