பிளஸ் 2 தேர்வு முடிவு
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதனால், திட்டமிட்டபடி, இன்னும் ஒரு வாரத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் துவங்கி, ஏப்., 6ல் முடிந்தது. இதில், 8.66 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். விடைத்தாள் திருத்தம், ஏப்., 11ல் துவங்கி, அந்த மாத இறுதியில் முடிந்தது. மாநிலம் முழுவதும், 80 மையங்களில் விடை திருத்த பணிகள் நடந்தன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இதில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மதிப்பெண்களை பதிவு செய்து, பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே, 12க்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திட்டமிட்டபடி, 16ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment