விடிய விடிய போராட்டம் - EXCLUSIVE REPORT
விடிய விடிய போராட்டம் ...
2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண் களையக் கோரி நேற்று சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்... இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் குடும்பத்துடன் , குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைக்கப்பட்டனர், மாலை விடுவித்தும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாது தொடர்ந்து இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் ...
2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் வலுக்கிறது, விடிய விடிய கொட்டும் பனியில் பச்சிளம் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டது மனதை உருக வைத்தது...சுமார் 7000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
காலையில் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து தர இயலாது , கோயம்பேடு பேருந்து நிலைய கழிவறைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆசிரியர்கள் வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்...
இன்று போராட்ட குழுவின் பிரதிநிதிகள் போராட்டத்தை வாபஸ் பெறுவதற்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...
2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண் களையக் கோரி நேற்று சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்... இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் குடும்பத்துடன் , குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைக்கப்பட்டனர், மாலை விடுவித்தும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாது தொடர்ந்து இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் ...
2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் வலுக்கிறது, விடிய விடிய கொட்டும் பனியில் பச்சிளம் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டது மனதை உருக வைத்தது...சுமார் 7000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
இன்று போராட்ட குழுவின் பிரதிநிதிகள் போராட்டத்தை வாபஸ் பெறுவதற்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...
Comments
Post a Comment