இனிய விளம்பி வருட வாழ்த்துக்கள்...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
விளம்பி வருடம் சித்திரை மாதம் 01 ஆம் நாள் அதாவது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை வாக்கியப் பஞ்சாங்கப்படி காலை 07.00 மணிக்கு பிறக்கின்றது.
விளம்பி என்பதை தமிழில் பிரகாசமான, ரம்யமான வருடம் என கொள்ளலாம்.
இது இந்துக்களின் 60 வருட சுற்று வட்டத்தில் 32 ஆவது வருடமாகும். முதனாளிரவு அதாவது 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பின் இரவு 03. 00 மணிமுதல் சனிக்கிழமை முற்பகல் 11. 00 மணிவரை விஷு புண்ணிய காலமாகும்.
இப்புண்ணிய காலத்தில் வைகறையில் துயிலெழுந்து மனத்தூய்மையுடன் இஷ்ட தெய்வங்களை, குல தெய்வங்களை மனதார பிரார்த்தனை செய்து கண்ணாடி, தீபம், நிறைகுடம், தன் வலக்கை, திருமறைப் புத்தகம், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், சந்தனம் முதலான மங்களப் பொருட்களை தரிசனம் செய்து, நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து, மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றையிலையும் காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானம் செய்து,
சிகப்பு நிற பட்டாடையாயினும் அல்லது சிகப்பு, கறுப்பு கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணிந்து, விநாயகர் மற்றும் குலதெய்வ வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்து, குரு, பெற்றோர் முதலிய பெரியோரை வணங்கி, அவர்களின் ஆசி பெற்று, உற்றார், உறவினர், நண்பர்களுடன் அளவளாவி,
அருசுவை உணவுடன் வேப்பம்பூ, நெல்லிக்கனி போசனம் செய்து, புதுவருடத்தில் தாங்கள் ஆற்றக்கூடிய, தாங்கள் செய்யக்கூடிய குடும்ப, சமய, சமூகப் பணிகளை மனதில் திட்டமிட்டு, உறுதிப் பூண்டு மங்களகரமாக வாழ்வோமாக.
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Comments
Post a Comment