தேர்வு - வசன கவிதை...
தேர்வு!!!
தோழர் - மணிகண்ட பிரபு
#துவக்க நிலையில்
அடுத்த மாசம் இந்நேரம் தீபாவளி அப்பிடிங்கிற மோடிலேயே இருக்கும் அடுத்த மாசம் இந்நேரம் பரிட்சை அப்பிடீங்கிற பரபரப்பு.
இருக்கிற காலண்டர்லயே சாமி படம் போட்ட காலண்டரை மனசுக்குள்ள மைண்ட் மேப்பா போட்டுக்குவோம்.அதைதான் துணி துவைக்கிற க்ளிப் வைத்து எடுத்துட்டு போவோம்.கொஞ்சம் வேப்பிலை சொருகி.
எக்சாம் பேட் எடுத்திட்டு வருபவனை இளிச்சவாயன் மாதிரி பார்ப்போம்.
ஒன்றாவது,இரண்டாவதெல்லாம் சிலேட்டில் பரிட்சை எழுதின எங்களுக்கு மூன்றாவது பி க்ளாஸில் தான் பேப்பரில் பரிட்சை எழுதப் பழகினோம்.
முதல்முறையாய் ரூல்ட் பேப்பரில் பரிட்சை எழுதினது மறக்க முடியாதது.வீட்டு நாயை நீவிக்கொடுப்பது மாதிரி பேப்பரை சரியாக மடித்து நீவுவோம்.முதல் பக்கம் முடிந்தவுடன் கூகுள் மேப் இல்லாத காலத்தில் வழிதெரியாம முழிப்பது போல 2வது பக்கத்துக்கு பதிலா 3வது பக்கத்தில் எழுதிடுவோம்.இது அப்ப வரலாற்று பிழை மாதிரி எல்லாரும் டீச்சர்கிட்ட முறையிடுவாங்க.. இந்த வருசம் நீ பெயில் னு பக்கத்திலிருப்பவங்க கோரசா சொல்லுவாங்க.முதல்பக்கம் திருப்ப ஆரம்பிச்சவங்க நம்மை பார்த்து சூதானமாயிடுவாங்க
கணக்குக்கு அன் ரூல்ட் பேப்பர் அதாவது பால் பேப்பர்.வெள்ளைச்சட்டை போட்ட அன்று எப்படி அழுக்காகுமோ அதுமாதிரி அந்த பால்பேப்பரில்தான் மைபென்
உதறிய துளி, நடராஜா பென்சில்ல எழுதி அழிச்சால் அப்பிடி அச்சா தெரியும்.
*முதல் பரிட்சைக்கு எல்லாரும் தலைக்கு குளிக்கணும்கிறது எழுதாத விதி
*கோயிலுக்கு போய் திருநீறு வாங்கி பூசிக்கணும்
*கொஸ்டின் பேப்பர் வாங்கும் முன்பு சாமி கும்பிட்டுட்டு ஓபன் செய்யனும்
*உடுக்கை இழந்தவன் கை மாதிரி இங்க் இல்லனு தெரிந்தா ஆன் தி ஸ்பாட்டில் பத்து சொட்டு இங்க் தருவான் உண்மையான நண்பன்
*பாக்கெட் சைஸ் சாமி போட்டோ வைத்து பென்சில் துருவலை பேப்பரில் வைத்திருப்போம்.
அதுதான் சாமிக்கு புஷ்பம்
*பரிட்சை எழுதியவுடன் ஒன் பாத்ரூம் கேட்டு வெளியில் போவது வீரதீரசெயல்.அப்ப உலாத்திட்டு இருக்கிறவனை பாத்து அளவலாவுவது அலாதியானது.
#மேல் வகுப்பு பரிட்சை நாளில்
*பரிட்சைக்கு முன்னாடி பூக்கட்டுற கயிறு ஒரு பந்து வாங்க்கனும். பரிட்சை பேப்பர் கட்ட
*முதலில் அடிசனல் சீட் கேட்பவனை அதிசயமா பார்ப்போம். ஆனா அவன்தான் கம்மி மார்க் எடுப்பான்
*படிச்ச கேள்வி வருவது அத்தை மகள் ஊரிலுருந்து வந்த சந்தோசத்தை போல மகிழ்ச்சியானது.
*ஜியோமென்ட்ரி பாக்சை கீழ போடனும்.அந்த சத்தம் கேட்டால்தான் அது எக்சாம் ஹால்
*தாவர செல், விலங்கு செல் கேள்வி வந்தால் பென்சில் எடுத்து நெல்லு குத்திற மாதிரி டொக்கு டொக்கு னு ரூமையே கதற வைக்கணும்
*வடிவியலில் காம்பஸ் ஒருகையிலும், அதில் சொருகியுள்ள பென்சிலை பிடித்தும் வட்டம் போடுவோம்.அப்புறம் வரைமுறையில் முதலில் ஒரு கவராயத்தை எடுத்துக்கொண்டேன் ல ஆரம்பித்து கடைசியில வட்டம் கிடைத்தது னு அடடே ஆச்சர்யகுறினு முடிப்போம்
*உலகமேப்பில் நாட்டை குறிப்பது
நாடு பிடிப்பதுபோல மோசமானது.தெரிந்த பேரே வராது திபெத் எகிப்து,ஆப்கானிஸ்தான்னு வரும்.எது வந்தாலும் அண்டார்டிகாவில் ஒரு பேர் எழுதுவது வழக்கம்.
*பிட்டு கொண்டுபோக முரட்டுதனமான தைரியமும், கப்பித்தனமான புத்திசாலித்தனமும் தேவை.
வராத கேள்வியின் பிட் வைத்திருப்பது வருமானவரி கட்டாத பணம் வைத்திருப்பது மாதிரி.எந்நேரமும் ரைடு வரும். மாட்டிக்குவோம்
*இங்க்லீஸ் செகன்ட் பேப்பருக்குதான் ரொம்ப டைம் கிடைக்கும்.அப்பதான் ஒவ்வொருத்தரும் விடும் கொட்டாவியை எண்ணி விளையாடுவோம்
*கையில் பிட் எழுதியவன் உடனடியா மாட்டுவான்கிறது சான்றோர் வாக்கு.
*செருப்பிலும், முட்டிக்கு மேல் காலிலும் வேதியியல் ஃபார்முலாவை எழுதியவனை கால் பரிட்சையில் மாட்டி கூட்டிக்கொண்டு போகும்போது ஏசுநாதரை அழைத்துச்செல்வது போல பாவமாய் பார்த்தோம்
*பிட் அடிச்சு மாட்டியன் என்ன ஆனான்னு தெரிஞ்சுக்க விரும்புறது எக்ஸாம் ரிசல்ட் பார்ப்பதுபோல சுவாரஸ்யமானது
பரிட்சை இன்னிக்கு சாதாரணமாயிருச்சு.ஆனா அந்தக்காலம் மாதிரி வராது. எக்சாம் என்றால் பொறுப்புணர்ச்சி இருந்துச்சு.இப்பெல்லாம் அன்றாடம் பரிட்சை எழுதியதால் இன்னிக்கு அது சாதாரணமாயிருச்சு.இருந்தாலும்.புதுமைப்பித்தனின் நிகும்பலை கதையில் சொல்வது மாதிரி
"அந்த தேர்வறை போர்க்களம் மாதிரி.இன்றுபோய் நாளை வா எச்சரிக்கையுடன் ஒவ்வொரு நாளும் அனுப்புகிறது தேர்வறை"
எழுத்து
-மணிகண்டபிரபு
திருப்பூர்...

Comments
Post a Comment