பிளஸ் டூ - மாணவர்கள் உயர்கல்வி வழிகாட்டி
அறிவியல் படிப்புகளில் கொட்டிக்கிடக்கு ஆயிரம் வேலைகள்!
இந்நிகழ்வை சென்னை விஷன் லிமிடெட் நிறுவன சி.இ.ஓ., டாக்டர் பாலசாண்டில்யன் ஒருங்கிணைத்து, &'அறிவியலில் புதிய படிப்புகள்&' என்ற தலைப்பில் பேசியதாவது:மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு அடுத்து அறிவியல் துறை படிப்புக்களை தான் தேர்வு செய்வர். வழக்கமான அறிவியல் படிப்பை தாண்டி இளங்கலை பிசினஸ் அனலிட்டிக்ஸ், டேடா அனலிட்டிக்ஸ், டேடா மைனிங், டேடா சயின்ஸ், அனலிட்டிக் பார்மஸி, டேடா டெக்னாலஜி, கிரிமினாலஜி, வெப் டிசைனிங், அனிமேஷன் டெக்னாலஜி, ஐந்தாண்டு படிப்பான இன்டக்ரேட்டடு எம்.எஸ்சி., வனம் மற்றும் மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள் உள்ளன.இதுவிர ஓட்டல் மேனேஜ்மென்ட், ஸ்போர்ட்ஸ் எக்சசைஸ் சயின்ஸ், நாட்டிக்கல் சயின்ஸ், விஷூவல் கம்யூனிேகேஷன் உட்பட பல படிப்புகள் உள்ளன. இதுபோன்ற படிப்புகள் தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளில் அதிகம் உள்ளன. அவை அங்கீகாரம் பெற்றவையா என ஆய்வு செய்து சேரலாம்.
தேவ்குமார், பேராசிரியர் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, மதுரை (தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு)படித்தவுடன் வேலை கிடைக்கும் இப்படிப்பு குறித்து பலருக்கும் தெரியவில்லை. வெளிநாடுகளில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இது இடம் பெற்றுள்ளது. 1948 தொழில்சாலை சட்டத்தின் கீழ் அனைத்து தொழில்சாலைகள், நிறுவனங்களில் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வேண்டும். தற்போது ஆண்டிற்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே இதை படிக்கின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கில் தேவையாக உள்ளனர். 70 சதவிகிதம் செய்முறை பயிற்சி தான் இருக்கும். மும்மை நேஷனல் சேப்டி கவுன்சிலில் அனுமதி பெற வேண்டும். மும்பை மற்றும் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் இப்படிப்புகள் உள்ளன. இப்படிப்பு படித்தால் கப்பல் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளிலும் பணி வாய்ப்பு கிடைக்கும்.
சுரேஷ்குமார், பேராசிரியர், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, மதுரை (மரைன் கேட்டரிங்)இது மூன்று ஆண்டுகள் படிப்பு. படித்து முடித்தவுடன் நுாறு சதவிகிதம் வேலைவாய்ப்பு உறுதி. கப்பல் நிறுவனங்கள் வளர்ச்சியால் இதற்கான எதிர்காலமும் சிறப்பாக உள்ளது. தியரி மிக குறைவு. கப்பலில் வேலை கிடைக்கும் பட்சத்தில் ஆரம்ப சம்பளமே 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அத்துடன் கப்பல் நிறுவனங்களில் ஏராள சலுகைகளும் கிடைக்கும். இப்பணியில் வருமான வரி சலுகை உள்ளது.பல நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல கட்டமைப்பு உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
லட்சுமி, பேராசிரியை வைஷ்ணவா கல்லுாரி, சென்னை (முழு அறிவியல்)மனிதர்களின் ஒவ்வொரு செயல்களிலும் அறிவியல் உள்ளது. பயன்படுத்தும் உபகரணங்கள் அனைத்தும் அறிவியல் உண்மையை அடிப்படையாக கொண்டுள்ளன. பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., எம்.பில்., பிஎச்.டி., படிப்புகள் உள்ளன. இயற்பியல், வேதியியல், கணிதம் என அடிப்படை அறிவியல் படிப்புக்களை தாண்டி மேலும் பல்வேறு படிப்புகள் உள்ளன. இன்டக்ரேட்டடு பி.ஜி., படிப்புகள் உள்ளன. பி.ஜி., முடித்தவுடன் நெட், செட் தகுதி தேர்வுகளை எழுதி கல்லுாரி ஆசிரியர் பணிக்கு செல்லாம். பி.எட்., படித்தால் பள்ளி ஆசிரியர் பணி கிடைக்கும். இதுதவிர வங்கி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கும் எளிதில் தயாராகலாம்.
கிருஷ்ணன், பேராசிரியர், ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல்ஸ் (ஆரோக்கிய அறிவியல்)ஆரோக்கிய அறிவியல் பகுதிகளில் ஏராளமான படிப்புகள் உள்ளன. இவை அனைத்தும் இயற்பியல், வேதியல், உயிரியல் என ஒருங்கிணைந்த படிப்புகள் தான். இத்துறைகளில் எப்போதும் தேவை குறைவதில்லை. இதுகுறித்து மருத்துவ பல்கலை வெப்சைட்டுகளை பார்த்தால் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது ஆயிரம் நோயாளிக்கு ஒரு டாக்டர் என உள்ளனர். இதே நிலை தான் நர்சஸ், மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும் உள்ளன. பிசியோதெரபி, மெடிக்கல் லேப், கிரிக்டிக்கல் கேர், ஆம்புலன்ஸ் கேர், டயாலிசிஸ் டெக்னாலஜி உட்பட பல்வேறு டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன. படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது.
நன்றி : தினமலர்

Comments
Post a Comment