இன்ஜினியரிங் அட்மிஷன் 2018
இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேரும் படிப்பு இன்ஜினியரிங். 500க்கும் அதிகமான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, ஒன்றரை மாதத்துக்கும் மேலாக இரண்டு லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்படும் நாட்களில் அண்ணா பல்கலைகழக வளாகமே மனித தலைகளால் நிரம்பி இருக்கும். மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு முன்னரே இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்தப்படுவதால், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மருத்துவம் படிக்க சென்றுவிடுவதால், குறிப்பிட்ட மாணவர்களின் இடங்கள் காலியாகவே இருக்கின்றன. இந்த பிரச்னையை தவிர்க்க 2018-19 கல்வியாண்டு முதல் இணையதளம் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் கலந்தாய்வு விண்ணப்பித்தல் அறிவிப்பு வெளியானதும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இல்லை என்றால் 44 அரசுக் கல்லூரிகளில் இணைய சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது.
மாணவர்கள் தங்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்துவிட்டு, பிளஸ்2 தேர்வு முடிவு வந்ததும் அதுதொடர்பான தகவல்களை பதிவு செய்யலாம். மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது, அவர்களுக்கு யூசர் ஐடி, பாஸ்வேர்ட் வழங்கப்படும், அதில் தங்கள் தொடர்பான விவரங்களை மாணவர்கள் அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வு தொடர்பான அனைத்து தகவல்களும் அனுப்பப்படும். அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் (www.annauniv.edu) மாணவர்கள் கூடுதல் தகவல்களை அறியலாம். அரசுக்கல்லூரிகளில் 44 இணைய சேவை மையங்களில் 6 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். மாணவர்களின் வசதிக்காக பரப்பளவில் பெரிய மாவட்டத்தில் 2 இணைய சேவை மையங்களும், சிறிய மாவட்டத்தில் ஒரு இணைய சேவை மையமும் அமைக்கப்படுகிறது. இதனால் கலந்தாய்வுக்கு விணணப்பித்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, இடம் தேர்வு செய்தலுக்கு மாணவர்கள் தங்கள் மாவட்டத்தை விட்டு வெளியே வரவேண்டிய தேவை இருக்காது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது மாணவர்கள், தங்களிடம் உள்ள எல்லா சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின், கல்லூரியை தேர்வு செய்ய மாணவர்களுக்கு 3 நாட்கள் வாய்ப்பு வழங்கப்படும். எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கான ரேண்டம் எண், தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து மாணவர்கள் 5 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படும். தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் படிக்க விரும்புகிறீர்களா என்று மாணவர்களிடம் ஒப்புதல் பெறப்படும். கல்லூரியை தேர்வு செய்த மாணவர் மருத்துவம் உள்ளிட்ட வேறு படிப்புகளுக்கு சென்றுவிட்டால் அடுத்தடுத்த சுற்று கலந்தாய்வு மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு 5 சுற்றுகளாக இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட உள்ளது.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 250ம், இதர பிரிவு மாணவர்களுக்கு 500ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணையதள வங்கி சேவை, பணம் செலுத்தும் ஆப்கள் மூலமாகவும் மாணவர்கள் பணம் செலுத்தலாம்.

Comments
Post a Comment