TNPTF பொதுச்செயலாளர் முதல் அறிக்கை
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலாளர் அறிக்கை*
*பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!வணக்கம்.*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 12வது மாநிலத் தேர்தல் வீரஞ்செறிந்த புதுக்கோட்டை மண்ணிலே மிகுந்த எழுச்சியோடும்,உற்சாகத்தோடும் நேற்று(04.03.2018)நடைபெற்றது*
*இயக்கத்தின் அமைப்பு விதிகளுக்கு உட்பட்டும்,தொழிற்சங்க இலக்கணத்தோடும்,உயர்ந்தபட்ச ஜனநாயக நெறிமுறைகளோடும் நடைபெற்ற அத்தேர்தலில் மாநிலம் முழுவதுமிருந்து பங்கேற்றுச் சிறப்பித்த பேரியக்கத்தின் அனைத்து மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மால மையம் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது*
*தமிழ்நாட்டு ஆசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் நம் பேரியக்கத்தின் மாநிலத் தேர்தல் நிகழ்வுகளை காண்பதற்காக மாநிலம் முழுவதுமிருந்து புதுக்கோட்டைக்கு உணர்வுபூர்வமாக வருகைதந்து பார்வையாளர்களாகக்கலந்துகொண்டு சிறப்பித்த இயக்கத் தோழர்களை மாநில மையம் பாராட்டி மகிழ்கிறது*
*மாநிலத் தேர்தல் நிகழ்வுகளை மிக நேர்த்தியாகவும்,ஜனநாயக மாண்புகளோடும் நடத்திட்ட தேர்தல் ஆணையாளர் தோழர்.செ.போத்திலிங்கம்(முன்னாள் பொதுச்செயலாளர்),துணைத்தேர்தல் ஆணையாளர்கள் தோழர்.எஸ்.ஜேம்ஸ்ராஜ்(முன்னாள் மாநிலத் துணைத்தலைவர்),தோழர்.அ.சுவாமிநாதன்(முன்னாள் மாநிலச் செயலாளர்)ஆகியோருக்கு மாநில மையம் நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறது*
*புதிதாகப் பொறுப்பேற்ற மாநிலப் பொறுப்பாளர்களை நிகழ்வின்போது வாழ்த்தி மகிழ்ந்த நமது பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும்,இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொருளாளருமான தோழர்.தி.கண்ணண்,முன்னாள் பொதுச்செயலாளர் தோழர்.செ.பாலசந்தர்,முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர்.ச.ஜீவானந்தம்,தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் தோழர்.சங்கர் ஆகியோருக்கு மாநில மையம் நன்றி தெரிவித்து மகிழ்கிறது*
*புதிதாகப் பொறுப்பேற்ற மாநிலப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நேரிலும்,அலைபேசி வழியாகவும்,சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துத் தெரிவித்த அனைத்துத் தோழர்களுக்கும்,நண்பர்களுக்கும் மாநில மையத்தின் உளப்பூர்வமான நன்றிகள்*
*மாநிலத் தேர்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாநில மாநாட்டுக்கு இணையாகச்செய்து இயக்க வரலாற்றில் முத்திரை பதித்துவிட்ட புதுக்கோட்டை மாவட்ட நமது பேரியக்கத் தோழர்களின் இரவு பகல் பாராத பேருழைப்பு வியக்கத்தக்கது.புதுக்கோட்டை நகரெங்கும் இயக்கப்பதாகைகள்,இயக்கத்தின் வண்ணமணிக்கொடிகள் பட்டொளி வீசிய காட்சி,மாநிலம் முழுவதுமிருந்து வருகை புரிந்த தங்களின் சக தோழர்களை வரவேற்றும்,நம் பேரியக்கத்தின் கொள்கைகளையும்,இலட்சியங்களையும்,கோரிக்கைகளையும் தாங்கி நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த வரவேற்புத்தட்டிகள்,மிகச்சிறந்த நிகழ்வரங்கம்,அறுசுவை உணவு,உபசரிப்பு என புதுக்கோட்டை மாவட்டத்தோழர்களின் அபரிதமான ஆற்றல்மிகு உழைப்பை மாநில மையம் நன்றியுடன் பாராட்டி மகிழ்கிறது.*
*தோழமையுடன்*
*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Comments
Post a Comment