உஷார்- உளவாளி போன்கள்...
ஜூனியர் விகடன் - பதிவு
அலசல்
உங்கள் போனுக்குள் ஓர் உளவாளி! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி
தென் தமிழகத்தின் ஒரு மாநகரில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெண் அவர். சமீப நாள்களாக அவருக்கு ஒரு பிரச்னை. அவ்வப்போது அவர் மொபைல் போனில் திடீரென சில குரல்கள் கேட்கின்றன.
‘‘இன்னிக்கு கோயிலுக்குப் போகணும்னு சொன்னியே... இன்னுமா கிளம்பலை?’’ என்று அது கேட்கும். ஆம்... அன்று அவர் கோயிலுக்குப் போக வேண்டும் என்று தன் தோழியுடன் பேசியபோது சொல்லியிருந்தார். அதைத்தான் அந்தக் குரல் சொன்னது. இப்படியாக, ‘பால் கொதிக்கிறது’, ‘மொட்டை மாடியில் துணி காய்ந்துவிட்டது’ என அவரின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை அவருக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது அந்த மொபைல் குரல்.
முதலில், அது ஏதோ பேய் அல்லது ஆவியின் வேலை என்றுதான் அவர் நினைத்திருக்கிறார். ஆனால், போகப் போக அந்தக் குரல் விரசமான விஷயங்களையெல்லாம் பேசத் தொடங்கியது. அந்தப் பெண்ணின் பல அந்தரங்க அடையாளங்களை யெல்லாம் குறிப்பிட்டுப் பேசியது. ‘எந்நேரமும் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள்’ என்ற உணர்வு அவருக்கு அதீத பயத்தைத் தந்தது. ஒரு கட்டத்தில் இந்த விஷயங்களை மறைக்கவும் தெரியாமல், வெளியில் சொல்லவும் முடியாமல் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. தீர்வு தெரியாமல் ஒருமுறை தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறார்.
ஒருநாள் ஃபேஸ்புக்கில் ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ எனும் குழுவின் சைபர் க்ரைம் விழிப்புஉணர்வு பிரசாரங்களைப் பார்த்து அவர்களைத் தொடர்பு கொள்கிறார். ‘‘முதலில் அந்த மொபைலை எறிந்துவிட்டு, புது மொபைலை வாங்குங்கள்’’ என்கிறார்கள் அவர்கள். ஆனால், வாங்கிய இரண்டாவது மொபைலிலும் அதே பிரச்னை. அடுத்து மூன்றாவது. அதிலும் பிரச்னை தீரவில்லை.
‘‘உங்கள் கணவருக்கு உங்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருக்க வாய்ப்புண்டா?’’ என்ற கேள்விக்கு, ‘‘என் கணவர் அப்படிப்பட்டவர் இல்லை’’ என்று பதிலளிக்கிறார். பல கேள்விகளைக் கேட்டு இறுதியாக, ‘‘மொபைல்களை எந்தக் கடையில் வாங்கினீர்கள்?’’ என்று கேட்டபோது, ‘‘மூன்று மொபைல்களையுமே தெரிந்த பையன் கடையில்தான் வாங்கினேன்” என்றார் அந்தப் பெண்.
தங்களிடமிருந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணின் மொபைலில் ‘ஸ்பை ஆப்’ (Spy App) இருப்பதை உறுதி செய்தனர் ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ குழுவினர். பிறகு வேறு கடையில் புது மொபைல் வாங்கப்பட்டு, அதில் ஸ்பை ஆப் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தபிறகு, பிரச்னையிலிருந்து விடுபட்டிருக்கிறார் அந்தப் பெண். தனக்குத் தெரிந்த பையனே இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளான் என்பது தெரிந்தும், அவன்மீது எந்தப் புகாரும் கொடுக்கமுடியாத சூழல். அதை நிரூபிப்பதற்கு ஆதாரங்களும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தன் மானமும் சுயமரியாதையும் போய்விடும் என்கிற பயம்.
இந்தச் சம்பவம், ஒரு பெருங் கடலின் சிறு துளி மட்டுமே. இன்றைய தேதியில் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த உளவாளி செயலிகள் (Spy Apps) இந்தியாவுக்குள் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் ராணுவம், தனியாக ஒரு சைபர் ஆர்மியை ஏற்படுத்தி எதிரி நாடுகளைக் கண்காணித்த காலம் போய், இப்போது வீடுகளுக்குள்ளும் உறவுகளுக் குள்ளும் இவை ஊடுருவியுள்ளன. ‘‘உங்கள் அன்புக்குரியவர்களைக் கண்காணிக்க எங்கள் ‘ஸ்பை ஆப்’பை பயன்படுத்துங்கள். உங்கள் காதலுக்குரிய வர்களைப் பத்திரமாகப் பாதுகாத்திடுங்கள். தொடர்புக்கு...’’ என்று வந்த ஒரு குறுந்தகவலில் தொடங்கிய இந்தத் தேடல், பல அதிர்ச்சி கரமான விஷயங்களைக் கட்டவிழ்த்து விட்டது.
‘ஸ்பை ஆப்’ என்பது என்ன?
உங்களின் மொத்த செயல்பாடுகளையும் கண்காணிக்கும் உளவாளி. இந்த உளவாளியை உங்களைக் கண்காணிக்க வைப்பது மிகச் சுலபம். உங்கள் மொபைலில் உங்களுக்குத் தெரியாமல் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்யவேண்டும், அவ்வளவே! இதை உங்கள் போனைக் கையில் எடுத்துத்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. உங்கள் கூகுள் அக்கவுன்ட்டின் பாஸ்வேர்டு யாருக்காவது தெரிந்தால், இணையதளத்திலிருந்தே உங்கள் போனுக்குள் ‘ஸ்பை ஆப்’பை இன்ஸ்டால் செய்துவிடலாம்.
இந்த ஸ்பை ஆப் உங்கள் மொபைலில் இருப்பதே உங்களுக்குத் தெரியாது. அதற்கான எந்த அடையாளங் களையும் அறிகுறிகளையும் அது காட்டாது. நீங்கள் யாருடன் என்ன பேசுகிறீர்கள், என்ன மெசேஜ் அனுப்புகிறீர்கள், இ-மெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஸ்கைப் எனச் சகலத்திலும் உங்களின் செயல்பாடுகளையும் இந்த ஸ்பை ஆப் கண்காணிக்க முடியும்; அதைக் கட்டுப்படுத்தவும் முடியும். உச்சமாக, உங்கள் மொபைல் கேமராவை உங்களுக்கே தெரியாமல் இயக்கி, நீங்கள் இருக்கும் இடத்தையும், உங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால், மொபைலில் கேமரா இயங்கிக் கொண்டிருப்பதற்கான எந்த அறிகுறிகளும் உங்களுக்குத் தெரியாது. அதேபோல், உங்கள் மொபைலின் மைக்கை இயக்கி உங்களைச் சுற்றி நடக்கும் உரையாடல்களையும் தெளிவாகக் கேட்க முடியும்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டிருந்த இந்த விஷயங்களை இன்று எவரும் பெற்றுவிட முடியும். செலவு, சில ஆயிரங்கள் மட்டுமே!
‘‘இந்த ஸ்பை ஆப்களின் ஆரம்பம் ஒரு நல்ல நோக்கம்தான். குழந்தைகளைக் கண்காணிக்க பெற்றோர்களுக்கு இது உதவும் என்ற அடிப்படையில் தான் வந்தன’’ என்கிறார், ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ குழுவைச் சேர்ந்த வினோத். ‘‘பல நிறுவனங்கள், தங்களின் பணியாளர்களை இதன்மூலம் கண்காணித்தன. தங்கள் நிறுவன ரகசியங்களை அவர்கள் எங்காவது சொல்லிவிடுவார்களோ என்பதைக் கண்காணிக்க இது பயன்படுத்தப்பட்டது. இன்றும் குழந்தைகளையும் நிறுவனங்களையும் முன்னிறுத்தியே இந்த ஸ்பை ஆப்களுக்கு விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், இன்று அது அதற்காக மட்டுமே பயன்படுகிறதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை.
காதலர்கள் ஒருவரையொருவர் கண்காணிக்கிறார் கள். சந்தேகப்படும் கணவர்கள், மனைவியைக் கண்காணிக்கிறார்கள். குறிப்பாக, வெளிநாட்டு வேலையிலிருக்கும் பலர், தங்கள் மனைவிக்கே தெரியாமல் இந்த ஆப்களை போனில் இன்ஸ்டால் செய்து வைத்து அவர்களைக் கண்காணிக்கிறார்கள். இது குடும்ப உறவுக்குள் பெரிய பிளவுகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு நாளும் இப்படி நூற்றுக் கணக்கான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த நம் நாட்டில் சரியான சட்டங்களும் இல்லை, அதுகுறித்த தொழில்நுட்ப முன்னெடுப்புகளும் இல்லை. இந்த டிஜிட்டல் உலகில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு தீர்வு எதையும் சொல்ல முடியவில்லை’’ என்று ஆதங்கத்துடன் பேசுகிறார் வினோத்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த ஸ்பை ஆப்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தனிச் சட்டங்கள் ஏதுமில்லை. இது, முழுக்க முழுக்க ‘தனிநபர் உரிமை’ (Right to Privacy) சட்டத்தின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. இவற்றை விற்கும் நிறுவனங்களும், ‘எங்கள் விற்பனை சட்டபூர்வமானதே. இதை உபயோகிப்பவர்களும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உபயோகிக்க வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டு விடுகின்றன. இதுகுறித்து கோவையைச் சேர்ந்த சைபர் க்ரைம் வழக்கறிஞர் சத்யநாராயணனிடம் பேசினோம்.
‘‘தனிநபர் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் அரசியல் சட்ட அமைப்பைக் கொண்டது இந்தியா. அரசு கொண்டு வந்த ஆதார் கார்டு திட்டமே கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தது இதன் அடிப்படையில் தான். ஆனால், இங்குதான் ஸ்பை ஆப்கள் மூலம் தனிமனிதர்களின் அந்தரங்கங்கள் வரை சூறை யாடப்படும் அவலம் நிலவுகிறது. ஒருவர், தன் குழந்தைகளையோ அல்லது துணையையோ அவர்களின் அனுமதியுடன் கண்காணிக்க இந்த ஸ்பை ஆப்களைப் பயன்படுத்துவது சட்டபூர்வ மானதுதான். ஆனால், இங்கு அப்படி நடப்பவர்கள் மிகக்குறைவு.
ஸ்பை ஆப்களை உபயோகிப்பவர்கள் பலரும் மிக மோசமான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது ‘தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000’தான். அதில் தனிமனித சுதந்திரம் மற்றும் உரிமைகள் குறித்துப் பேசுவது மொத்தமே ஆறு பிரிவுகள் மட்டுமே. அதே சமயம், ஒரு நிறுவனம் தன் பணியாளர்களை இந்த ஆப்களின் மூலம் கண்காணிப்பது சட்டபூர்வமானதாகத்தான் இருக்கிறது. இந்தச் சட்டங்களில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.இன்றைய உலகில் லத்தி, துப்பாக்கிகளுடன் நிற்கும் போலீஸ் மட்டுமே மக்களைப் பாதுகாத்திட முடியாது. எதிரிகள் வேறு ரூபங்களை எடுத்துவிட்டனர். அவர்களை எதிர்கொள்ள நாமும் மாற வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இந்த மாற்றத்தை எவ்வளவு விரைவுபடுத்த முடியுமோ, அவ்வளவு நல்லது’’ என்று எச்சரிக்கிறார் சத்யநாராயணன்.
உலகமே மொபைலின் தொடு திரையில் சுருங்கிவிட்ட இந்த டிஜிட்டல் உலகில், மனித மனங்களைப் பாழ்படுத்தும் சூழல்கள் பெருகிவிட்ட நிலையில், அறம் சார்ந்த வாழ்வு மட்டுமே இதற்கான தீர்வாக இருக்கமுடியும்.
- இரா.கலைச்செல்வன்
அசிங்க வியாபாரம்!
‘‘தங்கள் போனில் இப்படிப்பட்ட ஆப் இருக்கிறதா என்பதைப் பெண்கள் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். ஏனெனில், இதில் நடக்கும் இன்னும் பல விஷயங்களை என்னால் வெளிப்படையாகச் சொல்லவே முடியாது. இந்த ஸ்பை ஆப்களின் மிக முக்கிய அபாயமே, இதைக் கொண்டு போனின் கேமராவை இயக்க முடியும் என்பதுதான். பல பெண்களின் அந்தரங்கங்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து, அதை வியாபாரம் செய்வது பெரியளவில் நடக்கிறது. இவற்றை வைத்து, பெண்களை மிரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளன. இது குறித்து போலீஸில் புகார் கொடுக்கக்கூட பெண்கள் முன்வருவதில்லை. அவர்களால் இதுகுறித்த சரியான ஆதாரங்களைத் திரட்ட முடிவதில்லை என்பது ஒரு பிரச்னை. அப்படி ஒரு புகார் கொடுத்தால், சமூகத்தில் தங்களின் பெயர் பாதிக்கப்படும் என்கிற பயம் இன்னொரு பிரச்னை. இதனால், வெளியில் சொல்லமுடியாமல் பல பெண்கள் தவிக்கிறார்கள்’’ என்கிறார், ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ குழுவைச் சேர்ந்த வினோத்.
வெறும் 4,000 ரூபாய்!
நமக்கு வந்த ஒரு குறுந்தகவலில் இருந்த நம்பரைக் கொண்டு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் ஒரு ‘ஸ்பை ஆப்’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். முதலில் பேசிய ஒரு பெண், அந்த ஆப்பின் சிறப்புகளை விளக்கிவிட்டு, ‘‘ஒரு மொபைலில் இதை இன்ஸ்டால் செய்ய 20,000 ரூபாய் ஆகும்’’ என்று சொன்னார். இந்த ‘ஆப்’பின் சட்ட அனுமதிகள் குறித்துக் கேட்டதற்கு, ‘‘எங்கள் நிறுவனத்தின் தலைவர் உங்களிடம் அதை விளக்குவார்’’ என்று சொல்லிட்டு ‘கட்’ செய்தார். பின்னர், பல தடவை அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்த்தும், அது ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்றே வந்தது.
டெல்லியில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘எங்களுடையது அரசு பதிவுபெற்ற நிறுவனம்தான். சட்டரீதியில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வேண்டுமென்றால், நீங்கள் இதை வாங்கி உபயோகிப்பது குறித்து உங்கள் சட்ட ஆலோசகரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். எங்களிடம் 4,000 ரூபாயிலிருந்து பேக்கேஜ்கள் தொடங்குகின்றன’’ என்று சொன்னார்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
‘ஸ்பை ஆப்’கள் நமக்கே தெரியாத பெயர்களில் நம் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். ‘Settings’ என்ற பெயரிலோ, ‘Tools’ என்ற பெயரிலோ இந்த ஆப் இன்ஸ்டால் ஆகியிருந்தால், உங்களுக்கு எப்படி சந்தேகம் வரும், சொல்லுங்கள்.
சில அறிகுறிகளை வைத்து உங்கள் போனில் ஸ்பை ஆப் இருப்பதை உறுதி செய்யலாம்.
* உங்கள் போனை ஆஃப் செய்யும்போது வழக்கத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்; ஆஃப் ஆன பிறகும் சில நொடிகள் அதன் திரை ஒளிரும்.
* நீங்கள் பயன்படுத்தாமலே திடீரென மொபைலின் திரை ஒளிரும்.
* எந்தப் பயன்பாடும் இல்லாமலே திடீரென போன் சூடாகும்.
* வழக்கத்தைவிட வேகமாக மொபைலின் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடும்.
* மொபைல் டேட்டா பயன்பாடும் வழக்கத்தைவிட அதிகமாகியிருக்கும்.
* உங்களுக்கு வரும் மெசேஜ்களை நீங்கள் படிக்காமலேயே, தானாகவே படிக்கப்பட்ட மெசேஜாக மாறியிருக்கும். அதை ‘ஸ்பை ஆப்’ பயன்படுத்தி யாரோ படித்திருப்பார்கள்.
* போன் அழைப்புகளைப் பேசும்போது பின்னணியில் தேவையற்ற சத்தங்கள் எழும்.
* உங்களுடைய ‘Location’ உங்களுக்கே தெரியாமல் ‘ஆன்’ ஆகியிருக்கும். உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிப்பதற்காக மொபைலின் ஜி.பி.ஆர்.எஸ் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், மொபைலில் எந்த ஆப் அதிக டேட்டாவைப் பயன்படுத்துகிறது என்று பார்த்து ‘ஸ்பை ஆப்’ இருப்பதை உறுதி செய்யலாம். ‘ஆன்டி வைரஸ்’ சாஃப்ட்வேர்கள் போலவே ‘ஆன்டி ஸ்பை வேர்’களும் கிடைக்கின்றன. இதற்கு உதவ இணையதளங்களும் இருக்கின்றன. நம்பிக்கையானதுதானா என்று பார்த்துப் பயன்படுத்த வேண்டும்.

Comments
Post a Comment