TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை - 24.2.18
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*JACTTO-GEO சென்னை முற்றுகை : TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை - 24.2.18*
*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!*
*புரட்சிகர வணக்கங்கள்!*
*☀21.2.18 முதல் கடந்ந 4 நாள்களாகச் சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ-வின் மறியல் போராட்டத்தில் கண்துஞ்சாது களத்தில் உடனிருந்து போராட்ட வீச்சினை உரமேற்றிட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்ப்படைத் தளபதிகளே!*
*☀களச்சூழலால் காலம் மாற்றி களத்திற்கு அழைத்தபோதும் கடமையாற்றும் உணர்வு வேட்கையோடே களத்தை நிறைத்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்க்குணத்தை மீண்டுமொருமுறை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் 4 நாள்களிலும் பெரும்பான்மையாகக் களத்தில் நின்ற நம் இயக்கத் தோழர்களே!*
*☀அரசின் அடக்குமுறைகளையும் மீறி நான்காம் நாள் மறியலில் பெரும்படையெனக் களம்புகுந்து காவல்துறையினரைத் திக்குமுக்காடச் செய்த நமது பேரியக்கத்தின் பெண் தோழர்களே!*
*☀உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.*
*☀4 நாள் மறியலைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்ட வடிவத்தினைத் திட்டமிட இன்று மாலை ஜாக்டோ-ஜியோ-வின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது.*
*☀இன்றைய மறியலில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் தோழர்.ச.மோசஸ் மீது அடக்குமுறையை ஏவிய காவல்துறையைக் கண்டித்து ஜாக்டோ-ஜியோ கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.*
*☀மேலும், எதிர்வரும் தேர்வுக் காலத்தினைக் கவனத்தில் கொண்டு மாணவர் நலனை கருத்தில் கொண்டு பின்வரும் போராட்ட வடிவங்களை ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.* அதன்படி,
*⚡ 24.3.2018* அன்று கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி *மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டப் பேரணி* நடத்துதல்.
*⚡ 1985, 1988--ல் நடைபெற்ற தலைநகர் முற்றுகையைப் *போன்று* மற்றுமொரு வீரஞ்செறிந்த முற்றுகையை, *8.5.2018* அன்று, *இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்களைச் சென்னையில் கூட்டி தலைமைச் செயலக முற்றுகை* நடத்துதல்.
*☀ஜாக்டோ-ஜியோவின் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளில் நமது இயக்கத் தோழர்கள் அனைவரும் தீரத்துடன் கலந்து கொண்டு, உரிமை வேட்கைத் தழலைத் தலைநகர் முற்றுகையில் குவிக்கும் கள நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.*
*ஒன்றுபடுவோம்! போராடுவோம்!*
*இறுதி வெற்றி நமதே!*
_தோழமையுடன்_
*செ.பாலசந்தர்,*
_பொதுச் செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*_©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment