ஜாக்டோ ஜியோ மறியல் - கைது...
*பழைய ஓய்வூதிய திட்டம் கோரி போராடிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னையில் கைது!*
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தலைமைச்செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி 21 மாதத்துக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் திடீரென தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் சாலையிலேயே மயங்கி விழுந்தனர்.
பிரதமரின் நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணியாக செல்ல முயன்றதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். எனினும் முதல்வர் தங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று எஞ்சிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தொடர்கின்றனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்வர் திங்கட்கிழமை ஜாக்டோ ஜியோ அமைப்பினரை சந்திப்பார் என்று போலீசார் அவர்களிடம் கூறி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Comments
Post a Comment