ஹாவர்டு பல்கலைகழகம்- செய்தி தொகுப்பு தினமலர்
வியப்பளிக்கும் ஹார்வர்டு!
அறிவியல், மருத்துவம், வேளாண்மை, பொருளாதாரம், சட்டம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், மாணவர்களுக்கு சிறப்பான உயர்கல்வியை கற்றுத்தரும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் என்றுமே முன்னணி வகிக்கும், ஹார்வர்டு பல்கலை பற்றிய ஓர் பார்வை இதோ!
சிறப்பம்சம்
சுமார் 2,400 ஆசிரியர்களுடன், மொத்தம் 22 ஆயிரம் மாணவர்கள் படிக்கும், அமெரிக்காவின் மிக சிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படும், ஹார்வர்டு பல்கலை 1636ம் ஆண்டு மாசசூசெட்ஸ் பே பகுதியில் நிறுவப்பட்டது. இங்கு பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்ட மாணவர்களில், 48 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் 48 பேர் புலிட்சர் பரிசு வென்றவர்கள் என இப்பல்கலையின் புகழ் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தனித்துவ படிப்புகள்
அனைத்து வகையான படிப்புகளையும் இப்பல்கலை வழங்கினாலும், அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் வழங்கப்படும் நியூரோ பயாலஜி, சிஸ்டம் பயாலஜி, பயோமெடிக்கல் இன்ஜினியரிங், அப்ளைடு மேத்மெடிக்ஸ் பட்டப்படிப்புகள்; மேலாண்மை துறையில் வழங்கப்படும் தொழில் முனைவோர் மேலாண்மை, வணிகம், சர்வதேச பொருளாதாரம், பொது மேலாண்மை பட்டப்படிப்புகள்; மருத்துவ துறையில் ஒருங்கிணைந்த எம்.டி.,-பிஎச்.டி., ஒருங்கிணைந்த எம்.டி.,-எம்.பி.ஏ., ஒருங்கிணைந்த எம்.டி.,-எம்.பி.எச்., ஒருங்கிணைந்த எம்.டி.,-எம்.பி.பி., ஆகிய படிப்புகள் தனித்துவம் மிக்கவை. மேலும், வடிவமைப்பு துறையில், எம்.ஆர்க்., எம்.டிசைன்., டி.டிசைன்., போன்ற பட்டப்படிப்புகள் சர்வதேச மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இலவச படிப்புகள்
ஹார்வார்டு மற்றும் தி மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியால்(எம்.ஐ.டி.,) நிறுவப்பட்ட ’இடிஎக்ஸ்’ கற்றல் தளம் மூலம், பல்வேறு துறைகளில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இணைய இணைப்பை கொண்டு, திறந்தநிலை கல்வி கற்றல் முறையில், ஆன்லைன் மூலம் ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி., வழங்கும் குறுகிய கால படிப்புகள் மற்றும் தொலைநிலை கல்வி படிப்புகளையும் பெறலாம்.
முக்கிய கல்வி நிறுவனங்கள்
ஹார்வர்டு பல்கலையின் கீழ் செயல்படும் மிக முக்கிய கல்வி நிறுவனங்கள்; ஹார்வர்டு கல்லூரி, ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல், ஹார்வர்ட் டிவைனிட்டி பள்ளி, ஹார்வர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், ஹார்வர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் டிசைன், ஹார்வர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், ஹார்வர்ட் கென்னடி பள்ளி, ஹார்வர்ட் சட்ட பள்ளி, ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல், ஹார்வர்ட் பல் மருத்துவ பள்ளி, ஹார்வர்ட் ஜான் ஏ. பால்சன் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் அப்ளைடு சயின்சஸ் மற்றும் ஹார்வர்ட் டி.ஹெச். சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்.
சேர்க்கை
இக்கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களின், ‘சேட்’ அல்லது ஏ.சி.டி., தேர்வு மதிப்பெண், ஆங்கில மொழி புலமை தேர்வான ’டோபல்’ தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்காணல் மதிப்பெண் ஆகியவை மதிப்பிடப்பட்டு, அதன் அடிப்பையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.
விபரங்களுக்கு: www.harvard.edu
நன்றி: தினமலர்

Comments
Post a Comment