பொங்கல் வைக்க உகந்த நேரம்
தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 14.1.2018 நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகின்றது. நாளை எந்த நேரத்தில் பொங்கல் வைக்க உகந்தது என்று பார்க்கலாம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 14.1.2018 நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகின்றது. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் பொங்கல் வைப்பது நல்லது. அல்லது மதியம் 1.45 மணிக்கு மேல் 2.05 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று முறை சுற்றி அந்தப் பானையை வைக்க வேண்டும்.
பானையில் வண்ணமயமான கோலமிட்டிருப்பது நல்லது. பானை வைக்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். பின்னர் பால் பொங்கும் பொழுதும், இறைவனுக்கு பொங்கல் படைக்கும் பொழுதும் சங்கு ஊத வேண்டும். மனையில் மங்கலம் பொங்க, பால் பொங்கும் பொழுது ‘பொங்கலோ பொங்கல்.. மகர சங்கராந்திப் பொங்கல்’ என்றும் சொல்லிப் பலவிதமான காய்கறிகளை குழம்பு வைத்துப் படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு.
கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும். வாழ்க்கை இனிக்க, கரும்பாக அமைய, கரும்பும் வைத்து வழிபட்டால் பொங்கும் பொங்கலைப் போல் இன்பம் பொங்கும். சோறு படைக்கும் பொழுது, சூரியன் இருந்து சாப்பிடும் விதத்தில் இலையின் நுனிப்பகுதியும், அடிப்பகுதியும் அமைவது சிறப்பாகும். கதிரவன் வழிபாடு கனிவான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
நன்றி..மாலைமலா்
இன்று!
ஹேவிளம்பி வருடம், தை மாதம் 1ம் தேதி, ரபியுல்ஆகிர் 26ம் தேதி,
14.1.2018 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி நாளை அதிகாலை 4:20 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, கேட்டை நட்சத்திரம் மதியம் 3:28 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், மரண,அமிர்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
பொது : பொங்கல் பண்டிகை, பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7:30 - 8:30 மணி,
பிரதோஷம், நந்தீஸ்வரர், சூரியன் வழிபாடு, சபரிமலை மகரஜோதி தரிசனம், கரிநாள்.
நன்றி : தினமலர்

Comments
Post a Comment