முழு சந்திர கிரகணம்
இன்று(31.1.18) முழு சந்திர கிரகணம்: 3 வகையில் காட்சி அளிக்கும் நிலவு
150 ஆண்டுகளுக்கு பிறகு 3 அரிய நிகழ்வுகளுடன் இன்று முழு சந்திர கிரகணம் நடக்க உள்ளது.
சந்திர கிரகணம், 6.25 மணிக்குத் தொடங்கி 7.25 மணி வரை நீடிக்கும். வழக்கமாக வரும் சந்திர கிரகணத்தின்போது தோன்றுவது போல அல்லாமல் இந்தமுறை புளூ மூன், பிளட் மூன், சூப்பர் மூன் ஆகிய மூன்று வகையில் சந்திரன் காட்சி அளிக்கும்.
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது முழுமையாக விழுவதால் சந்திர கிரகணம் நிகழ்கிறது. மாதத்தின் 2ஆவது பவுர்ணமி என்பதால் சந்திரன் நீல நிறத்தில் காட்சி அளிக்கும். இது புளூ மூன் என்ற அரிய நிகழ்வாகும். மேலும், சந்திரன் தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பாகும்.
அதோடு இந்த சந்திர கிரகணத்தின்போது சந்திரன் மீது சூரியனின் ஒளி நேரடியாக படாமல் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு சிகப்பு நிறம் மட்டும் சந்திரன் மீது விழும். இதனால் நீலநிற சந்திரன், சிகப்பு நிறமாக மாறும். இது பிளட் மூன் என்று அழைக்கப்படும் 2ஆவது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது. மூன்றாவது அரிய நிகழ்வு, சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.
நிலா பூமியை சுற்றி வரும் போது மாதத்திற்கு ஒரு முறை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது நிலா வழக்கத்தை விட பெரிதாகி ’சூப்பர் மூன்’ ஆக காட்சி அளிக்கும். இந்த அரிய நிகழ்வும் முழு சந்திர கிரகணத்தின் போதே நடக்கிறது. அப்போது வழக்கத்தை விட 10 சதவீதம் பெரிதாக நிலா காட்சி அளிப்பதோடு, சற்று பிரகாசமாகவும் தெரியும் என வானியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
அந்த நேரத்தில் கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும் என்றும், இருப்பினும் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தெரியும் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் எனவும் வானியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்
செய்தி நன்றி : புதிய தலைமுறை
Comments
Post a Comment