சர்வதேச கவிதைப் போட்டி 2018
மதுரை காமராஜ் பல்கலையில் சர்வதேச தமிழ் கவிதை போட்டி
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தமிழியல் துறை மற்றும் திருமூர்த்திமலை தென்கயிலை தமிழ்ச் சங்கம் சார்பில், சர்வதேச தமிழ்க் கவிதை போட்டிகள் ஜூலையில் நடக்கின்றன.
போட்டி ஒருங்கிணைப்பாளர், சத்தியமூர்த்தி கூறியதாவது:
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ளவும், சிறந்த படைப்பாளர்களை இளம் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் வகையிலும், போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பங்கேற்க விரும்புவோர், தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழர் வாழ்வியல் முறை, பண்பாட்டு அடையாளம், சாதனைகள், நம்பிக்கைகள், விளையாட்டுக்கள், மருத்துவ முறைகள், உணவு முறைகள், திருவிழாக்கள், வழிபாட்டு முறை போன்ற தலைப்புகளில் எழுதலாம்.
படைப்பாளர், கவிஞர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள், தாங்கள் தேர்வு செய்த தலைப்பிற்கு ஏற்ப, மரபு அல்லது புதுக்கவிதை வடிவில், 150 சொற்களுக்கு குறையாமல் அனுப்ப வேண்டும். கவிதை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை, தபாலில் அனுப்ப வேண்டும்.
ஒருவர், ஒரு தலைப்பில் மட்டும் எழுத முடியும்.முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 7,000, மூன்றாம் பரிசு 5,000 ரூபாய். அனைத்து கவிதைகளுக்கும் தலா 1,000 ரூபாய் ஆறுதல் பரிசு உண்டு. கவிதைகளை mkuannalcon@gmail.com,
mkutamil2010@gmail.com என்ற மின்னஞ்சலில் 30.03.2018க்குள் அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 94886 16100 அலைபேசியில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்

Comments
Post a Comment