அயல் நாட்டுப் பேய் - பகுதி 5
அயல்நாட்டுப் பேய்
பகுதி - 5
முன்கதை : பகுதி 4
பகுதி 3,2&1
குறுந்தொடர் ஆசிரியர் : மு.வெ.ரா
(அயல்நாட்டு பேய் குறுந்தொடரை தொடர்ந்து வெளியிட இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்...
ஆசிரியர்)
பேய்க்கும் சாராவிற்கும் பல இவுகள் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது . வழக்கம் போல் இல்லாமல் பேய் கேட்கும் கேள்விகள் சற்று ஆழமாகவும் சமுதாய குறைகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் இருந்தன .
சாரா உள்ளூர மகிழ்ந்தான். அப்படித்தான் ஒரு நாள் அயல் நாடுகளைப் பற்றி நீ என்ன நினைக்கிற என்ற துபேய் . நாங்கள் எல்லா நாடுகளையும் எங்கள் நாடாகத் தான் பார்ப்போம் , "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது எங்கள் முன்னோர் வாக்கு என்றான் . பேய் பேசத் தொடங்கியது . நீ உனது நாட்டை வரைபடமாக உன் கையால் வரைந்து பார்த்ததுண்டா? என்றது பேய் . பல சமயம் வரைந்துள்ளேன் என்றான் .அப்படியா ,
சரி , உங்கள் அருகில் உள்ள சீனாவை தனி நாடாக வரைந்து பார்த்ததுண்டா ? அதே போல் பாக்கிஸ்தானை ? , நேபாளத்தை , இன்னும் சில அண்டைநாடுகளை தனித்தனியே வரைந்துப் பார்த்ததுண்டா ? எனக் கேட்டது . இல்லை என்றான்.. விழி மூடாமல் அதிர்ந்து நின்றான் சாரா . மேலும் பேய் கேட்டது , அயல் நாடுகளிலும் மனிதர்கள் வாழ்கிறார்கள் தானே, அங்கும் மலைகள் , நதிகள் , ஏரிகள் இருக்கின்றன தானே , நீங்கள் அங்கு வந்து பார்க்கக் கூடத் தேவையில்லை ஆனால் உங்கள் கையால் அவைகளை வரைந்து பார்க்கக் கூடவா முடியவில்லை , ஏன் இந்த அலட்சியம் அல்லது அவசியமின்மை ? , உங்கள் நாடு எதிரி என்று சொன்னால் நீங்களும் அயல் நாடுகளை எதிரியாகவே பார்ப்பீர்களா என்றது பேய் . எங்களுக்கு விருப்பமில்லாமல் இல்லை , எங்கள் கல்வி முறை அப்படி உள்ளது .நாங்கள் என்ன செய்வது என்று திகைத்தபடியே பதில் சொன்னான் சாரா .
சரி சரி இனியாவது உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள் பழக்கப்படுத்துங்கள் என்று முடித்தது . சாராவும் பேயும் உறங்கி விட்டனர்....
விடியற்காலையில் எழுந்தான் சாரா . அவனோடு உறங்கியிருந்த பேய் அவனுக்கு முன்பே எழுந்து சில புத்தகங்களை அதன் அருகே வைத்து படித்து கொண்டிருந்தது . சாரா பேயின் அருகே சென்று அமர்ந்தான் அவனுடைய புத்தகங்களான 'தாய், 'வால்காவிலிருந்து கங்கை வரை',
'ஒரு தோட்டியின் மகன்' , 'இன்னும் கி.ரா' , சுரா , ஈ.வெ.ரா , எஸ். ரா ஆகியோரின் புத்தகங்கள் சிலவற்றை பேய் எடுத்து வைத்திருந்தது.
இந்தப் பேய் இவ்வளவு சீக்கிரம் படிக்கத் தொடங்கி விட்டதே என .ஆச்சரியமாகப் பார்த்தான் . முதன் முறையாக பேயைப் பார்த்து பொறாமைப்பட ஆரம்பித்தான் . படித்தல் என்பது ஒரு மனிதனை புதுமையானவனாக மாற்றும் சக்தியுடையது . மனித மூளையின் சிந்திக்கும் திறனை பேரண்ட வெடிப்பைப் போல புது மாற்றங்களை செய்யக் கூடியது . அதுவும் இந்த
"ரா -வரிசையில் வரும் எழுத்தாளர்கள் புத்தகங்கள் என்றால் இன்னும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும்"
சிறப்புடையனவே எனக் கருதினான் . பேய் கேட்கும் கேள்விகள் ஆழம் மிகுந்து இருப்பதற்கு இது போன்ற புத்தகங்கள் இன்னும் உரமிட்டாற் போல் இருக்கும் என கருதிக்கொண்டான் .
அன்று சாராவிற்கு ஒரு போராட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்தது . அவன் தயார் ஆனான் . நீ வருகிறாயா என்று பேயிடம் கேட்டான் . இல்லை , நான் இந்த புத்தகங்களையெல்லாம் படிக்க வேண்டும் என கூறியது பேய் . இவன் சற்றே சிரித்துவிட்டு சைக்கிளில் கிளம்பினான் . சைக்கிள் மிதித்தப்படி பேயின் மாற்றத்தைப் பற்றி யோசித்தான். இவ்வளவு சீக்கிரம் இந்தப் பேய் உணர்ந்து கொண்டதைப் போல நம் இளைஞர்கள் உணர்ந்து கொள்ளவில்லையே என வருத்தப்பட்டான் .
பேய் சொன்னதைப் போல கைபேசிக்கு வாக்கப்பட்டது போல் எந்நேரமும் அதனுடே இருக்கிறார்கள். சரி ஏதாவது ஒரு நாள் அவர்கள் புத்தகங்களைப் படிப்பது பற்றிய அறிவும் விழிப்புணர்வும் வராமல் போகாது என நம்பினான் . பேய் படிப்பதைப் பற்றி அவன் பொறாமைப்பட்டாலும் மனிதர்கள் சில பேர் படிக்கிறார்கள் . ஆனால் எல்லோரும் செயல் களத்தில் வருவதில்லை, புரட்சியான செயல்களில் ஈடுபடுவதில்லை அதைப் போல இந்த பேயும் இருக்கும் எனக் கருதி போராட்டத்தில் பேச வேண்டிய கருத்துக்களைப் பற்றி சிந்தித்தபடி வேகமாக மிதித்தான் சைக்கிளை .
அன்றைய நாள் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி போராட்டக் களத்தில் பேசினான் .போராட்டம் முடிந்த பின் பக்கத்து டவுனில் புத்தகக் கண்காட்சி நடப்பதை அறிந்து அங்கு சென்று அவன் நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்த புத்தகங்களான " அவன் காட்டை வென்றான் , வெண்ணிற இரவுகள் , மறைக்கப்பட்ட இந்தியா ஆகிய புத்தகங்களை வாங்கினான் . இரவு சற்றுத் தாமதமாகவே அறைக்குத் திரும்பினான். உள்ளே சென்று பேயைப் பார்த்தான் . ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு . அவன் சற்றும் எதிற்பார்க்காத ஒன்றை பேய் செய்து கொண்டிருந்தது .
ஆம் பேய் எதையோ யோசித்தபடி எழுதிக் கொண்டு இருந்தது . அதற்காகத்தான் அவன் பேயைப் பார்த்து பயந்து போனான். இந்த பேய் செயல்பட தொடங்கி விட்டதே என நினைத்தபடி வியந்தும் அதனைக் காட்டிக் கொள்ளாமல் அவன் முகத்தை இயல்பாக வைத்த்துக் கொண்டான். கையில் என்ன என்றது பேய் .சில புத்தகங்கள் என்றான் .பேய் மிகவும் ஆசையோடு அவற்றை வாங்கி புரட்டிப் பார்த்தது . சாரா மனதுள் சில எண்ணங்கள் தோன்றின .
அப்பப்பா இது பேய் தானே ஆனாலும் புத்தகத்தின் மேல் இவ்வளவு சீக்கிரம் அளவுக்கு மீறிய பற்று வந்து விட்டதே . சாதாரன மனிதன் படிப்பதற்கும் எழுவதற்கும் ,பேய் படிப்பதற்கும் எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு . ஏனென்றால் மனிதன் சாதாரனமாகப் படிப்பான் , எழுதுவான் செயலாற்றுவான் . ஆனால் இது பேய் . பேய்ப் படிப்பு படிக்கும் பேய்யெழுத்து எழுதும் எனவே அது எதயைும் அதீத ஆற்றலோடு செயலாற்றும் என பயந்தான் .
பேய் செய்து வைத்திருந்த உணவை இருவரும் உண்ட பின் அன்றைய விவாதம் தொடங்கியது . பேய் கேட்டது " நீ ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை ?
(பதிலை தெரிந்து கொள்ள காத்திருங்கள் அடுத்த வாரம் வரை )
இத்தொடரை பற்றிய விமர்சனங்களை அனுப்ப
tnsocialpedia@gmail.com

படம்: Newyorktimes

Comments
Post a Comment