TNPTF கல்விச் செய்திகள் 15.11.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி29~15.11.17🗓*
☀அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்! -"அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களைவிட எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டுவருகிறது" என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
☀அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பிற்கு சுவரோவியம்! வண்ணமயமாகிறது 70 அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் - நாளிதழ் செய்தி
☀சொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
☀ தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
☀புதுச்சேரி அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்பட்டவர் குறித்து தணிக்கை செய்ய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பணி நியமனத்துக்கு தனி திட்டம் தயாரிக்கவும் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசு ஊழியராக இருந்து வேறு துறையில் ஈடுபடுபவர்களது சம்பளம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
☀சென்னை உள்பட, மாநிலம் முழுவதும், 100 இடங்களில்,'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கான, அரசின் இலவச பயிற்சி மையங்கள், நேற்று துவக்கப்பட்டன.முதல்வர் பழனிசாமி, பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.
☀ தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில்,57 வயதுக்கு மேலான, 5,685 பேர் உட்பட,79.69 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.இந்தாண்டு, அக்., 31 வரையிலான, பதிவு விபரங்களை அரசு, வெளியிட்டுள்ளது.
☀01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம் என அரசு தெளிவுரை கடிதம் வழங்கியுள்ளது.
☀மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (CBSE) பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
☀நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மயூரநாதசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 16 ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
☀TNPSC CCSE-IV (GROUP 4 & VAO COMBINED) NOTIFICATION RELEASED | தேர்வு அறிவிக்கை நாள்: 14.11.2017 விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2017. தேர்வுநாள்: 11.02.2018. காலிப்பணியிடங்கள்: 9351.
☀EMIS இணையதளத்தில் பிற பள்ளி மாணவர்களை அட்மிட் செய்வதில் நிலவிய குறைபாடு சரி செய்யப்பட்டுள்ளது.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment