கம்ப்யூட்டரே இல்ல; இணையதள சேவையாம்! தலைமை ஆசிரியர்கள் ஆதங்கம்
அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், கடந்த மாதத்தில் இணையதள சேவை வழங்குவதாக, தெரிவித்த அமைச்சரின் அறிவிப்பு, தண்ணீரில் எழுதிய வார்த்தைகள் போல் ஆனதாக, தலைமையாசிரியர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், தலா மூன்று கம்ப்யூட்டர்கள் வினியோகிக்கப்பட்டன. ஏழு ஆண்டுகளுக்கு முன், இவை வழங்கப்பட்டதோடு, பராமரிப்பு நிதி ஒதுக்காததால், பழுதடைந்த நிலையில், ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளன.இதை, இ-வேஸ்ட்டாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இருந்தால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, ஐந்து முதல், ஏழு கம்ப்யூட்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன. அலுவலக பணிகளுக்கு கூட, பல பள்ளிகளில், போதுமான எண்ணிக்கையில் கம்ப்யூட்டர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், கடந்த அக்டோபர் மாதத்திற்குள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தி தருவதாக அறிவித்தார். ’கம்ப்யூட்டரே இல்லாத நிலையில், இணையதள வசதியை அமைத்து தருவதால், என்ன பயன்’ என, தலைமையாசிரியர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
’அமைச்சரின் அறிவிப்பு சாத்தியமாக வாய்ப்பில்லை’ என, ’தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதை உறுதிசெய்யும் வகையில், தற்போது வரை, இணையதள வசதிக்கான பணிகள், எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
அரசுப்பள்ளிகளில், தொழில் நுட்ப முறையிலான கல்வியை, அறிமுகம் செய்யும் முன், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது அவசியம் என்பது, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், ’பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்தி தரும் முன், போதுமான எண்ணிக்கையில், புதிய தொழில்நுட்பம் கொண்ட, கம்ப்யூட்டர்கள் வழங்குவது அவசியம். இணையதள சேவை அளிப்பதாக, அறிவிப்பு வெளியான பின், எவ்வித அடுத்தக்கட்ட பணிகளும் துவங்கப்படவில்லை.
’கிராமப்புற பள்ளிகளுக்கு, அலுவலக பணிகளுக்காக அளிக்கப்பட்ட மோடம், நெட்வொர்க் கிடைக்காததால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், தனியார் பிரவுசிங் சென்டர்களை நாடும் நிலை நீடிக்கிறது. எனவே, பள்ளிகளில் உள்ள அடிப்படை சிக்கலுக்கு தீர்வு கண்ட பின், இதுபோன்ற அறிவிப்புகளை வெளிட்டால் மட்டுமே, பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.
செய்தி : தினமலர்...

Comments
Post a Comment