சென்னையில் இரவு முழுவதும் மழை - எச்சரிக்கை..
சென்னையில் இரவு முழுவதும் மழை நீடிக்கும் என எச்சரிக்கை
சென்னை: சென்னையில் தொடர்ந்து 4 மணி நேரமாக மழை பெய்து வருவதால் போக்குவரத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் மெட்ரோ ரயிலை நாடிச்செல்கின்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் வழக்கம் போல் இரவு 10 மணி வரையில் இயக்கப்படும் எனவும் வழக்கத்தை விட தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே மழை இரவு முழுவதும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மாநகர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்
நன்றி : தினமலர்
Comments
Post a Comment