பாரத் நெட் சேவை
மத்திய அரசு, ‘பாரத் நெட்’ திட்டத்தில், 2019 மார்ச்சுக்குள், அனைத்து கிராமங்களிலும், அதிவேக அகண்ட அலைவரிசை சேவையை வழங்க திட்டமிட்டு உள்ளது.
இத்திட்டத்தின், இரண்டாம் கட்ட பணிக்கான அறிவிப்பை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதையடுத்து, 30 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில், அகண்ட அலைவரிசை சேவைகளை வழங்க, ஆர்ஜியோ நிறுவனம், 13 கோடி ரூபாய் முன்பணம் அளித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம், 30,500 கிராம பஞ்சாயத்துகளுக்கு, அகண்ட அலைவரிசை சேவை வழங்க, முன்பணமாக, 5 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.
இது குறித்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், ஜெயந்த் சின்கா கூறியதாவது: பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணி, 31 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. அகண்ட அலைவரிசை சேவைக்காக, 1.50 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், கண்ணாடி நாரிழை கேபிள்கள் பதிக்கப்பட உள்ளன. ஏற்கனவே, 48 ஆயிரம் கிராமங்களில், அகண்ட அலைவரிசை சேவை துவங்கி விட்டது. மேலும், 75 ஆயிரம் கிராமங்கள், சேவையை துவக்க தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நன்றி - தினமலர்

Comments
Post a Comment