மிரட்டுது மழை... மிரளுது சென்னை
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிரட்டி வரும் கனமழையால் மக்கள் மிரண்டு போய் உள்ளனர்.
கடந்த 2015 ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சென்னையில் மழை பெய்தாலே மக்கள் பீதியடைய துவங்கி விடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதை வெளியேற்ற முடியாமல் மக்களும், மாநகராட்சியும் திண்டாடி வருகின்றனர். கடந்த 2015 வெள்ளத்தை காட்டிலும் இதில் பாதிப்பு குறைவு என்றாலும் சமீபமாக டெங்கு காய்ச்சல் பரவிவருவது காரணமாக தொடர்ந்து மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடப்பதால் நோய் தொற்று குறித்து மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நவ.,5ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் அதற்குள் சென்னையில் மீண்டும் கனமழை பெய்தால் நிலைமை மேலும் பலமடங்கு மோசமடையும்.
கடந்த 2015 வெள்ளத்திற்கு பின்பும், மழை குறித்து வானிலை மையம் முன்பே எச்சரிக்கை விடுத்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு இன்று பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதற்கு காரணம் என மக்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நன்றி : தினமலர்
Comments
Post a Comment