வாட்சப் பார்வேட் - செய்திதுளிகள் 7.11.17
*🗞📰 TODAY'S TOP NEWS 📰🗞*
1 கலா உற்சவ் போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
2 மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தற்போது சில புதிய நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்க 68 நாட்கள் வரை ஆகும்.
3 அம்பாசமுத்திரம் அருகே சோழவந்தான் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற 4 பேரை பிடிக்க முயன்ற போது திருடர்கள் தாக்கியதில் காவலர் காயம் அடைந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4 சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தினத்தந்தி பவளவிழா, மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் திருமண விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில் வருகிறார்.
5 வடகிழக்கு மழை வெளுத்து வாங்க வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் மொத்த கொள்ளளவை எட்டி வருகிறது. இதனால் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
6 ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் சர்க்கஸ் நிறுவனத்தில் யானை ஒன்று வண்ணச்சித்திரம் தீட்டும் காட்சி பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
7 உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊதியமும் விரைவில் உயர்த்தப்படவுள்ளது.
8 சென்னை, புறநகர்ப் பகுதிகளுக்குட்பட்ட 200 இடங்களில் தேங்கியிருந்த வெள்ள நீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
9 நாடு முழுவதும், உதவி பேராசிரியர் பணிக்கு நடந்த தகுதி தேர்வில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்.
10 அகில இந்திய விமானப் படையின் சாகசப் பயிற்சி உள்ளிட்டவற்றில் சுழற்கோப்பை வென்ற தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
11 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும், இனி வரும் நாட்களில் மழை படிப் படியாக குறையும் என்றும் சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
12 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.23 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(நவ.,6) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
13 நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.
14 மும்பையைச் சேர்ந்த 16 வயதே ஆன இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியுள்ளார்.
15 குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
16 திருச்செங்கோடு சிவன் கோவிலில் ரூ.7 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம், நந்தி சிலையை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 டெல்லியில் நடைபெற்ற பானசோனிக் ஓபன் கோல்ப் தொடரில் இந்திய வீரர் ஷிவ் கபூர் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
18 தமிழகம் முழுவதும், பள்ளிக்கல்வியில் தரத்தை உயர்த்த, அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை அறிவித்துஉள்ளார். நுாலக மேம்பாடு மற்றும் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தவும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நுாலகங்களுக்கும், மாணவர்களுக்கும் அரிய வகை புத்தகங்களை வழங்கும் வகையில், புத்தக கொடை திட்டத்தையும், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த, புத்தக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. பள்ளி வளாகங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒரு நாள் புத்தக கண்காட்சி நடத்தலாம். இதற்கு அதிகாரிகளை அணுகினால், புத்தக தலைப்புகள் மற்றும் தரத்தை பார்த்து, கண்காட்சி நடத்த அனுமதி அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
19 ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
20 சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், வியாசர்பாடி, மாதவரம், ஈழல், செங்குன்றம் மற்றும் மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Comments
Post a Comment