அயல் நாட்டுப் பேய் பகுதி-4
அயல் நாட்டுப் பேய் பகுதி-4
குறுந்தொடர்- ஆசிரியர் மு.வெ.ரா
விடியல் வெளியே வரத்தொடங்கியது . நேற்றிரவு சற்று தூங்குவதற்கு நேரம் ஆனதால் வழக்கம் போல் இல்லாமல் தாமதமாகவே எழுந்தான் சாரா . அன்று ஒரு போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான் . இரவில் பசியோடு படுத்ததால் வயிறு வறண்டு இருந்தது . சோறு கஞ்சி மட்டும் சாப்பிடலாம் என்று மாடியிலேயே இருந்த செங்கல்லையும் கொஞ்சம் விறகுகளையும் வைத்து அடுப்பு மூட்டினான் . அரிசி வேகும் முன்னாடியே குளித்து முடித்துவிட்டான் . பெரிய தட்டு ஒன்றை எடுத்து அதுல கொஞ்சம் நெருப்பு அள்ளிப் போட்டு சுருங்கியிருந்த தன் சட்டையை அயன் பண்ணிக்கொண்டான் .இந்த காலத்திலயும் இப்படிச் செய்வதற்கு காரணம் அந்த அவுஸ் ஓனர் தான். கரன்ட் பில் பிரச்சனை. 5 ரூ பான்ட்ஸ் எடுத்து முகத்திலும் சட்டையிலும் பூசிக்கொண்டான் . ஆக்கி வைத்த கஞ்சியை உப்பு போட்டு குடிச்சிட்டு வேக வேகமா புறப்பட்டான் . மார்க்சிம் கார்கி எழுதிய 'தாய் ' நாவலை கையில் பிடித்துக் கொண்டே போராட்டக் களத்திற்குச் சென்றான் சாரா . பேயும் அவனுடன் புறப்பட்டது . பேய் அவன் கண்ணுக்கு மட்டுமே தெரியும்படி இருந்தது. சாரா அன்றைய கூட்டத்தில் சிறப்பாக பேசினான்.
அவனுடைய எழுச்சிமிகு பேச்சைக் கேட்டு அங்கிருந்த தோழர்கள் பெரியோர்கள் அனைவரும் அவனைப் பாராட்டினர் . பல்வேறுபட்ட சமுதாயப் பிரச்சனைகளைக் குறித்து மற்றவர்களிடம் கலந்து பேசி முடித்துவிட்டு வழக்கம் போல தனது பணிகளை தொடர்ந்தான் .சில நாட்கள் இப்படியே கடந்தன .பேய் எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டது . சமைக்க ,துணி துவைக்க , சைக்கிள் ஓட்ட என சாராவிற்கு உதவிகள் செய்தது .
இரவு நேரத்தில் வெளியே படுத்துக் கொண்டு ஏதாவது ஒரு கருத்தைப் பற்றி இருவரும் பேசிக் கொள்வார்கள் .அப்படித்தான் ஓர் இரவில் சாராவிடம் ஒரு கேள்வி கேட்டது அயல் நாட்டுப் பேய் . "நீங்கள் உண்மையிலேயே இரவை ரசிக்கிறீங்களா ? இரவு அவ்வளவு சுகமானதா " என சாராவைப் பார்த்து கேட்டது . இப்படிப்பட்டக் கேள்வியை யாராவது கேட்பார்களா என்று எதிர்ப்பார்த்தவன் ஆவேசத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டான் சாரா .
" இரவு சுகமானதா ? இல்லை ,இல்லை , இல்லவே இல்லை . இரவு கொடுமையானது. பகலுக்கு சூரியன் காரணம் ஆனால் இரவுக்கு யார் காரணம் ? அப்படி யாரென்று தெரிந்தால் அவன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்பேன் "நீ செய்வது நியாயமா" என்று " . என்னைப் போன்ற இணையில்லா இளைஞ்சர்களுக்கு இரவு எவ்வளவு கொடுமையானது தெரியுமா உனக்கு .
இரவைப் போல இரும்புக் கரம் கொண்ட ஒருவரையும் நான் பார்த்தது இல்லை. பகல் எப்போதும் ஒரு குணத்தை மட்டுமே காட்டும் ஆனால் இரவிற்கு பல குணங்கள் உண்டு . இரவைக் கண்டு நான் தினம் தினம் பயப்படுற கிறேன் .
பகல் உடலை நடுங்கச் செய்வது இல்லை ,இரவு அதை வலிந்து செய்கிறது எனவே இரவு எனக்கு கிடைக்கப்பெற்ற தண்டனையாக கருதுகிறேன் . இருந்தும் ஒரே ஒரு மகிழ்ச்சி என்ன என்றால் இரவில் வர்ண பேதம் தென்படுவதில்லை .
இரவு எல்லாவண்ணங்களையும் கருப்புநிறமாகவே காட்டும் பகலைப் போல வண்ணங்களைக் காட்டி பிரிப்பது இல்லை அது ஒன்று தான் என்று ஆதங்கப்பட்டுக் கொண்டான் சாரா . பேய் சாராவின் வலியைப் புரிந்து கொண்டது. "எத்தனை இதயங்கள் சாராவைப் போன்றுவேண்டா வெறுப்பாக இரவுகளைக் கழக்கின்றனவோ " என நினைத்தது. அவன் கேட்ட கேள்விஅந்த பேய்க்கும் விடை தெரியவில்லை. உண்மையில் இரவிற்கு எது தான் காரணம் என்று . ,
அன்றைய இரவு சாராவின் சாடலைப் பெற்றுக் கொண்டே நகர்ந்தது . (அடுத்த திங்கள் வரும் வரை விழித்திருங்கள் பேய் இன்னும் சில கேள்விகள் கேட்கவிருக்கிறது....
தொடரும்..
இத்தொடரை பற்றிய கருத்துக்களை அனுப்ப tnsocialpedia@gmail.com

Comments
Post a Comment