வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 10,2017
இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ., 10-ம் தேதி
சென்னை மாவட்ட தொழில் நுட்ப அலுவலகத்தால் நடத்தப்படும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் கிண்டியில் நடைபெறுகிறது.
வேலைதேடும் இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வதற்காக தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், கிண்டி, சென்னை-32. மற்றும் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்பம்) சென்னை-32 சார்பில் வரும் 10-11-2017 (வெள்ளிகிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கிண்டியில் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில், 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு, முதுகலைபடிப்பு வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வரும் வேலை நாடுநர்கள் தங்களது கல்விச்சான்றுகள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணிக்குத் தேர்வு செய்யப்படும் இளைஞசர்கள் அன்றைய தினமே பணி நியமன ஆணை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
இப்பணியமர்த்தல் சேவையானது முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தையச் சேர்ந்த வேலைநாடும் இளைஸ்ரீர்கள் இந்த அhpய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment