TNPTF கல்விச் செய்திகள் 31.10.17
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 14~31.10.17🗓*
☀ ஏழாவது ஊதியக்குழு - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத் தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும். பிறகு நவம்பர் மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் - கூடுதல் முதன்மைச் செயலாளரின் கடிதம். (நாள்: 30.10.2017)
☀ தொடக்க கல்வித் துறையில் முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்று பின்னேற்பு கோரிய ஆசிரியர்கள் மீது விதிகள் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் கோரி இயக்குநருக்கு அரசு இணைச் செயலர் கடிதம்.
☀ கனமழை காரணமாக இன்று 9 மாவட்டங்களுக்கு (காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டிணம் ,தஞ்சை,விழுப்புரம், திருவாரூர் ,கடலூர் 9 ஒன்றியங்கள்,புதுக்கோட்டை) விடுமுறை அறிவிப்பு.
☀கனமழை முன்னிட்டு இன்று காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை.
☀ கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ம் தேதி உள்ளுர்
விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி தமிழகத்தில் இணைந்ததை கொண்டாடும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சஜ்ஜன்சிங் தவார் தெரிவித்துள்ளார்.
☀ கனமழை காரணமாக தென்காசி கல்வி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை - மாவட்டக் கல்வி அலுவலர் அறிவிப்பு.
☀ சுத்தம் சுகாதாரம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடத்துதல் சார்ந்து விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!!!
☀திட்டமிட்டப்படி இன்று (அக்.,31) அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் - அண்ணா பல்கலை., பதிவாளர் கணேசன்
☀பள்ளியில்ஆசிரியர் பணிநிரவலின் போதும் /புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி இயக்குநரிடம் RTI- மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.
☀7வது ஊதியக்குழுவின் அரசாணைக்கு தடை கோரி வழக்கு . தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு - நாளிதழ் செய்தி
☀அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வுஅறிவிக்கப்பட்ட, பிளஸ் 1 மாணவர்களுக்கு, இன்னும் வினாவங்கி வெளியிடாததால், அவர்கள், தேர்வுக்கு தயாராவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
☀நாடு முழுவதும் உள்ள, கே.வி., என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
☀தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கியது போல், பொதுத்துறை ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது
☀ஆதார் பதிவு மையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்படுவதை அடுத்து, ஆதார் பதிவுகளை, அரசு ஊழியர் ஒருவர், தன் விரல் ரேகையை பதிவு செய்து, உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments
Post a Comment