டெங்கு' தடுப்பு பணிகளில் அசட்டை! டூ சுகாதாரத்துறையினர் "கொர்ர்
*டெங்கு' தடுப்பு பணிகளில் அசட்டை! டூ சுகாதாரத்துறையினர் "கொர்ர்...'*
டெங்கு காய்ச்சல் குறித்த பீதி அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட சுகாதாரத்துறையும், மாநகராட்சி அதிகாரிகளும், நோய் தடுப்பு பணிகளில் முழுவீச்சில் களமிறங்கவில்லை.
தமிழகத்தில், மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தலைதூக்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில், டெங்கு அறிகுறியோடு, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், மாவட்ட சுகாதாரத்துறையோ, மாநகராட்சி நிர்வாகமோ, இது குறித்து கொஞ்சமும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.பெயரளவுக்கு சில இடங்களில், துப்புரவுப்பணி, கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் மட்டுமே நடக்கிறது. டெங்கு கொசு ஒழிப்பு பணியை, ஒரு இயக்கமாக, பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரை, கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவருக்கு கூட நிலவேம்பு கசாயம் வழங்கப்படவில்லை.மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனரின் தலைமையில் அமைக்கப்பட வேண்டிய நோய் தடுப்பு குழு, இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. ஏற்கனவே, அவிநாசி, பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில், டெங்கு காய்ச்சலில் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை, "தூக்கம் கலைக்காமல்' இருப்பது, கவலை அளிப்பதாக உள்ளது.இவ்விஷயத்தில், மாநகராட்சி சுகாதாரப்பிரிவினரும், அலட்சியமாகவே உள்ளனர். மாநகராட்சி பள்ளிகள், பொது இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தலைமை அரசு மருத்துவமனை உட்பட, மாவட்டத்தின் எந்த மருத்துவமனையிலும், டெங்கு காய் தடுப்புக்கு, சிறப்பு வார்டு ஏற்படுத்தப்படவில்லை.டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை நன்கு உணர்ந்துள்ள அதிகாரிகள், இனியாவது முழுவீச்சில் களமிறங்க வேண்டும்; மாவட்ட சுகாதாரத்துறையும், மாநகராட்சி சுகாதாரப்பிரிவினரும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை, போர்க்கால அடிப்படையில் துவக்க வேண்டும்.இப்பணிகளை, கலெக்டரும் கண்காணித்து, டெங்கு பாதிப்பில்லாத திருப்பூர் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments
Post a Comment