வேகமாக பரவும் டெங்கு - உஷார்..
டெங்கு'வால் 746 பேர் பாதிப்பு- தினமலர்
சென்னையில் கட்டுக்குள் இருக்கிறது; செப்டம்பர் வரை, 131 பேர் மட்டுமே பாதித்துள்ளனர்' என, மாநகராட்சி கூறியுள்ளது. இந்நிலையில், சென்னையில், இந்தாண்டில் இதுவரை, 746 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில், டெங்கு காய்ச்சலே இல்லை என்றும், டெங்கு கொசுக்களை முற்றிலும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், டெங்குவால் உயிரிழப்புகள் தொடந்தது. இதையடுத்து, கடந்த மாதம், ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும், டெங்கு நோயாளிகள் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. அதில், இந்தாண்டு இதுவரை, சென்னையில், 131 பேர் டெங்குவால் பாதித்துள்ளனர் என்றும், ஐ.ஐ.டி., மாணவர் ஒருவர் மட்டுமே, டெங்குவால் உயிரிழந்தார் என்றும், மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனை, கிளீனிக், பரிசோதனை கூடங்கள் என, அனைத்து இடங்களில் இருந்தும், காய்ச்சல் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இந்த தகவல், பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு அளிக்கப்படும். இவ்வாறு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும், இந்தாண்டு ஜனவரி முதல், செப்டம்பர் வரை, 746 பேர், டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கடந்த மாதம் மட்டும், தமிழகத்திலேயே அதிகபட்சமாக, சென்னையில், 25 பேர், டெங்குவால் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதும், நடப்பாண்டில், கடந்த மாதம் வரை, 9,575 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக, துாத்துக்குடியில், 1,116 பேர், சங்கரன்கோவிலில், 1,025 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், கோவை, மூன்றாம் இடத்திலும்; சென்னை, நான்காம் இடத்திலும் உள்ளன. கோவையில், 844 பேருக்கும், சென்னையில், 746 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி, தேனி, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கோவில்பட்டி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
மாநிலம் முழுவதும், கடந்த மாதம் மட்டும், 125 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை, டெங்குவை கட்டுப்படுத்தாத நிலையில், தமிழகத்தில் இந்தாண்டு, டெங்குவால் பாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்துள்ளதாகவே, சுகாதார துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

Comments
Post a Comment