தீபாவளி ரிலீஸாகும் திரைப்படங்கள்..
தீபாவளி பண்டிகை என்றால் ஸ்வீட், பட்டாசு, புத்தாடைக்கு பிறகு முக்கிய இடம் பிடிப்பது சினிமா தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி லிஸ்டில் இருந்து சினிமா விலகிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பண்டிகையை குறித்து ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகின. ஆனால் இந்தாண்டு வெறும் மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன. அந்த படங்கள் என்ன, அவற்றைபற்றிய சிறு முன்னோட்டம் இது...
மெர்சல்
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் முதன் முறையாக நடிக்கும் படம். 'தெறி' படத்தின் வரவேற்பிற்குப் பிறகு இயக்குனர் அட்லீக்கு விஜய் மீண்டும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தது பலருக்கும் பொறாமைதான். 'மெர்சல்' படத்திற்குப் பிறகு விஜய்யை மீண்டும் அட்லீ இயக்கப் போகிறார் என்பது இன்னும் பலருக்கு பொறாமையை ஏற்படுத்தலாம். சிவா - அஜித் கூட்டணியை விட அட்லீ - விஜய் கூட்டணி பலமாக இருக்கிறது என்கிறார்கள் திரையுலகத்தில்.
'மெர்சல்' படத்தின் கதை என்று இரண்டு நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஒரு சில கதைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. அவை உண்மைதானா என்பது 18ம் தேதி தெரிந்துவிடும். படத்தில் மூன்று விஜய், அப்பா விஜய்க்கு நித்யா மேனன், இரண்டு மகன்களில் ஒரு விஜய்க்கு சமந்தா, மற்றொரு விஜய்க்கு காஜல் அகர்வால் ஜோடி.
படத்தில் எஸ்.ஜே. சூர்யா, தான் வில்லன். இருந்தாலும் சத்யராஜ் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை இன்னும் சஸ்பென்ஸ் ஆகவே வைத்துள்ளார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். வெளியீட்டிற்கு முன்பே பாடல்கள் ஹிட் ரகத்தில் சேர்ந்துவிட்டன. விஜய் படம் வெளிவருகிறது என்றாலே ஏதாவது பிரச்சனைகள் முளைப்பதும் வழக்கமாகிவிட்டது. இந்தப் படத்திற்காக வந்துள்ள பிரச்சனைகளும் விலகி வெற்றி பெறும் என்று படக்குழுவினர் அதிக நம்பிக்கையில் உள்ளனர்.
மேயாத மான்
'பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி' படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், அவருடைய கம்பெனி மூலம் சில குறும்படங்களைத் தயாரித்து தியேட்டர்களில் வெளியிட்டுள்ளார். முதல் முறையாக 'மேயாத மான்' என்ற முழு நீளத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தை ரத்னகுமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான வைபவ் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடர் மூலம் புகழ் பெற்ற பிரியா பவானி சங்கர் இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். பிரதீப் குமார், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
வட சென்னை, ராயபுரத்தைக் கதைக் களமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள படம் என்பதால் இளம் ரசிகர்கள் 'மெர்சல்' போட்டியையும் மீறி இப்படத்திற்கு வருவார்கள் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.
சென்னையில் ஒரு நாள் 2
சரத்குமார் நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்த 'சென்னையில் ஒரு நாள்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள படம் 'சென்னையில் ஒரு நாள் 2'. ஆனால், முதல் பாகத்திற்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. வெறும் தலைப்பை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள். இரண்டு படங்களுக்குமான படக்குழுவினர்களே வேறு.
சரத்குமார் தனி ஹீரோவாக நடித்து தமிழில் படங்கள் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஜேபிஆர் இயக்கத்தில் ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் சரத்குமார், நெப்போலியன், சுகாசினி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய நாவல் ஒன்றின் தழுவல்தான் இந்தப் படம். க்ரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இந்தப் படம் 'மெர்சல், மேயாத மான்' படங்களின் போட்டியை சமாளிக்குமா என்பதுதான் கேள்வியே.
சில வருடங்கள் முன் வரை தீபாவளிக்குக் குறைந்தது ஐந்து படங்களாவது வெளிவரும். இப்போதெல்லாம் இரண்டு, மூன்று படங்கள் வருவதே பெரிய விஷயமாகிவிட்டது. இந்த வருட தீபாவளிக்கும் 'மெர்சல்' மட்டும் தான் முதலில் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் 'மேயாத மான், சென்னையில் ஒரு நாள் 2' ஆகிய படங்கள் போட்டியில் குதித்துள்ளன. இந்த மும்முனைப் போட்டியில் யாருக்கு வெற்றி என்பது தீபாவளி அன்று தெரிந்துவிடும்.
நன்றி : தினமலர்

Comments
Post a Comment