வாசிப்பதில் தயக்கமா? பெற்றோர் கவனத்திற்கு
வாசிப்பதில் தயக்கமா? பெற்றோர் கவனத்திற்கு...
வாசிப்பதற்கு கஷ்டப்படும் குழந்தைகளின் செவித் திறனை, பரிசோதிக்க வேண்டியது அவசியம் என்று பெற்றோர்களுக்கு ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்!
இங்கிலாந்தில் உள்ள கோவண்ட்ரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, வாசிக்க கஷ்டப்படும் குழந்தைகளில், 25 சதவீதம் பேரின் செவித் திறனில் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
காது கேட்பதில் மிதமான இடர்பாடு இருக்கும் குழந்தைகளாலும், வகுப்பில் பாடங்களை முழுமையாக கவனிக்க முடியாமல் போகும். அடிக்கடி காதில் தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளும் அவசியம் கவனிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பல்வேறு காரணங்களால், வார்த்தைகளின் உச்சரிப்பை, குழந்தைகளால் சரியாக புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால், வாசித்தல் அவர்களுக்கு சவாலாக விளங்குகிறது. ஆரம்ப காலத்திலேயே பெற்றோர், தங்களது குழந்தைகளை கவனித்தால், இப்பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்!

தகவல் : தினமலர்
Comments
Post a Comment