இந்திய விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

வேலூரில் (pincode - 632 001) அக்டோபர் - 9, 12 ஆம் தேதிகளில் இந்திய விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது .இந்திய விமானப் படைக்கு வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஊரீஸ் கல்லூரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏர்மேன் பணியிடத்துக்கான தேர்வு அக். 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 13.1.1998 முதல் 27.6.2001 வரையில் பிறந்த, திருமணமாகாத ஆண்கள் பங்கேற்கலாம்.
அக். 9 ஆம் தேதி காலை 6 முதல் காலை 10 மணி வரை மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், கரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுக்கும்,
12 ஆம் தேதி காலை 6 முதல் காலை 10 மணி வரை வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளுர், திண்டுக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுக்கும் தேர்வுகள் நடைபெறும்.
தகுதியுடைய நபர்கள் தங்களது 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச்சான்றுகளுடன் செல்ல வேண்டும். மாற்றுச்சான்றிதழை கல்லூரியில் சமர்ப்பித்திருந்தால், பள்ளி, கல்லூரி முதல்வரிடம் அசல் சான்றுகள் பள்ளி, கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற உறுதி சான்றிதழுடன் சுயசான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தேர்வில் பங்கேற்கும் நபர்கள் வேறு மாவட்டத்தில் ஏதேனும் பள்ளி, கல்லூரியில் பயின்றிருந்தால் சொந்த மாவட்டத்துக்கான சான்றிதழ்களை, அந்தந்த வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு www.airmenselection.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்

Comments
Post a Comment